For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப்பெரியாறு அணை...வெள்ளப்பெருக்கு...மக்களுக்கு இடுக்கி மாவட்டக் கலெக்டர் எச்சரிக்கை!!

Google Oneindia Tamil News

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து இருப்பதால், அணையின் நீர் மட்டம் அபாய கட்டத்தை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. விநாடிக்கு 17,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும். தற்போது அணையில் 130.5 அடி நீர் உள்ளது. ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 123.2 அடி அதிகரித்துள்ளது. இதையொட்டி பெரியாறு ஆறு ஒட்டி வாழும் மக்களுக்கு இடுக்கி மாவட்டக் கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கன மழையால் இந்த இரண்டு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல ஏக்கரில் பதிவிட்டப்பட்டு இருக்கும் விவசாய நிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தோட்டக் கலைத்துறையும் பெரிய அளவில் நீலகியில் பாதிக்கப்பட்டுள்ளது.

IMD issues Red Alert to Nilgiris and coimbatore

ஊட்டி அருகே இருக்கும் கூடலூரில் 349 எம்எம் தேவலாவில் 360 எம்எம், வால்பாறையில் 230 எம்எம் மழை நேற்று (வெள்ளிக்கிழமை) பெய்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாதங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார். அவர் கூறுகையில், ''கேரளா, வால்பாறை, ஆனைமலை ஆகியப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும். பலத்த மழையுடன், காற்றும் இருக்கும்'' என்று அறிவித்துள்ளார்.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கன மழை.. பல பகுதிகளில் வெள்ளம்.. நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கன மழை.. பல பகுதிகளில் வெள்ளம்.. நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரியின் பல இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குந்தா தால்லூகாவில் ஐந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளான. இங்கு 26 குடிசைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பந்தலூர் தாலோகாவில் பழங்குடியின மக்களின் சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மீட்புப் படையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பெய்த மழையினால் நீலகிரியின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.

கடந்தாண்டும் இதே நாளில் நீலகிரியில் அதீத மழை பெய்தது. கடந்தாண்டு அவலாஞ்சியில் 820 எம்எம் மழை ஆகஸ்ட் 8ஆம் தேதியும், ஆகஸ்ட் 9ஆம் தேதி 911 எம்எம் மழையும் பெய்து இருந்தது. அதேபோல் இன்றும் கன மழை பெய்யும் என்று அறிவித்து இருப்பது நீலகிரி மக்களை கவலை அடையச் செய்துள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் இருவரும் பார்வையிட்டனர்.

English summary
IMD issues Red Alert to Nilgiris and coimbatore rain alert given to valparai also
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X