For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 'இம்பீச்மென்ட்' தீர்மானம் - சீதாராம் யெச்சூரி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செயும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செயும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் போர்க்கொடி தூக்கினர். தலைமை நீதிபதி பாரபட்சமாக செயல்படுகிறார் என்பது நீதிபதிகளின் குற்றச்சாட்டு.

impeachment motion against CJI, says Sitaram Yechury

இந்த விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலைமை நீதிபதி விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை. ஆகையால் நாங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.

English summary
CPM General Secretary Sitaram Yechury said that, "We are discussing with opposition parties on possibility of an impeachment motion against CJI in Budget session".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X