For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேரு குடும்பம் குத்தகைக்கு எடுத்த அமேதி, ரேபரேலியில் அத்தனை தொகுதிகளிலும் காங். 'வாஷ் அவுட்'

சோனியா, ராகுலின் லோக்சபா தொகுதிகளான அமேதி, ரேபரேலியில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸ்- சமாஜ்வாதி கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

அமேதி: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் சோனியா, ராகுல் காந்தியின் லோக்சபா தொகுதிகளுக்குட்பட்ட 10 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ்- சமாஜ்வாதி கூட்டணி படுதோல்வியைத் தழுவியுள்ளது.

உத்தரப்பிரதேச தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தனித்து போட்டியிடும் முடிவில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டன.

In 10 Assembly constituencies of Sonia, Rahul's MP constituencies, Congress alliance loses

ஆனால் சோனியா, ராகுலின் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் 10 சட்டசபை தொகுதிகளை காங்கிரஸ் அடம்பிடித்து கேட்டது. பின்னர் 10 தொகுதிகளையும் காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சிகள் சமமாக பிரித்து கொண்டு தலா 5 தொகுதிகளில் போட்டியிட்டன.

சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி, பல தடவை பேசி சமாஜ்வாதியிடம் இருந்து பெற்றது. அந்த தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

ராகுல் காந்தி தவிர பிரியங்கா காந்தியும் தங்கி பிரசாரம் செய்தார். ஆனால் காங்கிரஸ் இத்தொகுதிகளில் வேட்பாளர்கள் அனைவரும் படுதோல்வி அடைந்துள்ளனர். அமேதி சட்டசபை தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் காயத்ரி பிரஜாபதி தோல்வி அடைந்தார்.

English summary
The Congress Alliance has lost in Sonia, Rahul's MP constituencies such as Amethi, Raebareli assembly constituencies. It is setback for congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X