For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் மாட்டு தோலை உரித்த தலித்துகள் மீது கொலை வெறி தாக்குதல்- பசு பாதுகாலர்கள் மீது வழக்கு

இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக குஜராத் மாநிலத்தில் மீண்டும் தலித்துகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பசு பாதுகாலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற

By Suganthi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநிலம் ஆன்ந்த் மாவட்டத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக தலித்துகள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய பசுப்பாதுகாவலர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் கசோர் என்னும் கிராமத்தில் தலித்துகள் இறந்த மாட்டின் தோலை உரித்ததால் ஆத்திரமடைந்த பசு பாதுகாவலர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை இரவு அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

In Gujarat atrocity on Dalit being skinned cow's skin.

கசோர் கிராமத்தில் வசித்து வரும் ரோஹித் மற்றும் அவரது தாயார் மணிபென் ஆகிய இருவரையும் தான் அந்தக் கும்பல் தாக்கியுள்ளது. அதனால் பயந்து போன ரோஹித் கிராமத்தை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார்.

ரோஹித் மீண்டும் கிராமத்திற்கு வந்த போது, அந்த கும்பல் வீடு புகுந்து ரோஹித்தையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளது. அதனையடுத்து அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

போலீசார் தாக்குதல் நடத்திய ஐவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட இரண்டு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஏழு பேரை தேடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட ரோஹித் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை 2016ஆம் ஆண்டு உனா என்ற இடத்தில் இதே போன்று இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக பசு பாதுகாவலர்கள் சிலர் நான்கு பேரை கட்டி வைத்து நிர்வாணப்படுத்தி கடும் தாக்குதலை நடத்தினர் . அந்த தாக்குதலைக் கண்டித்து மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
In Gujarat Anand district a dalit family attacked for being skinned dead cow's skin. Police register case against them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X