For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் பாஜக ஸ்வீப்.. காங்கிரசின் 37 ஆண்டுகால "பிரமாண்ட வெற்றி" சாதனை பறிபோகிறது?

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் அம்மாநிலத்தில் செய்த வெற்றி சாதனையை பாஜக இதுவரை முறியடிக்கவே இல்லை. இந்த தேர்தலில் அந்த சாதனையை பாஜக முறியடிக்க உள்ளது.

பாஜக கடந்த 1995ம் ஆண்டு முதல் 6 சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து பெற்றி பெற்று குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 1,5 தேதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் பாஜக வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.

குஜராத்தில் ஆரம்பமே அசத்தல்.. தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை.. ஆம் ஆத்மி. காங் நிலவரம் என்ன? குஜராத்தில் ஆரம்பமே அசத்தல்.. தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை.. ஆம் ஆத்மி. காங் நிலவரம் என்ன?

 காங்கிரஸ் கெத்து

காங்கிரஸ் கெத்து

இந்நிலையில் காங்கிரஸ் செய்த சாதனைகள் பேசு பொருளாகியுள்ளன. அதாவது, 1985ம் ஆண்டு குஜராத் தேர்தலில் காங்கிரஸ் மாதவ் சிங் சோலங்கி தலைமையில், 149 இடங்களை கைப்பற்றியது. ஒட்டுமொத்தமாக 55.55 சதவிகித வாக்குகளை கட்சி பெற்றிருந்தது. அதேபோல 1980ம் ஆண்டு தேர்தலில் 141 இடங்களையும், 1972ம் ஆண்டு தேர்தலில் 140 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. என்னதான் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தாலும் பாஜக இதுவரை 140 இடங்களை ஒருமுறை கூட தாண்டியதில்லை. ஏன் 140 எண்ணிக்கையை தொட்டது கூட கிடையாது. இது தற்போது வரை காங்கிரசின் சாதனையாக தொடர்ந்து வருகிறது.

 பெரிய கட்சி

பெரிய கட்சி

பாஜக அதிகபட்ச வாக்குகளை கடந்த 2002ம் ஆண்டு பெற்றிருந்தது. அதாவது 49.85 வாக்குகளை பெற்று 127 தொகுதிகளை கட்சி கைப்பற்றியிருந்து. இதுதான் குஜராத்தில் பாஜகவின் பலம். கடந்த 27 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் போயிருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் கட்சி தனது வாக்கு வங்கியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது,1990ம் ஆண்டில் கட்சியின் வாக்கு சதவிகிதம் 31. ஆனால் 2017ல் இது 43 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. 1990ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான இடங்களையே காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. இதில் 2002ம் ஆண்டில் மட்டும் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

 வாக்கு வங்கி

வாக்கு வங்கி

அதேபோல பாஜக 27 ஆண்டுகள் தொடர்ந்து குஜராத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் காங்கிரஸின் வாக்கு விகிதம் ஒருமுறை கூட 30 சதவிகிதத்திற்கு கீழ் சென்றதில்லை. குறிப்பாக 1998க்கு பிறகு கட்சி 35 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைதான் பெற்றிருக்கிறது. இம்முறை ஆம் ஆத்மி களத்தில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவி வருகிறது. எனவே காங்கிரஸ் வாக்கு வங்கி உடையும் என்று சொல்லப்படுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக புதிய முகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. இதனால் பழைய தலைகள் வேறு கட்சிக்கு தாவியுள்ளனர். ஆனால் காங்கிரஸை பொறுத்த அளவில் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்களுக்கு கட்சி மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. அதேபோல இம்முறை தனது தேர்தல் யுக்திகளையும் கட்சி மாற்றியுள்ளது.இந்த நிலையில் பாஜக 150 தொகுதிகளுக்கும் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த டிரெண்ட் நீடித்தால் புது சாதனையை பாஜக படைக்க வாய்ப்புள்ளது.

யுக்தி

யுக்தி

பிரதமர் முதல் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் தொடங்கி முக்கிய மத்திய அமைச்சர்கள் வரை தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக களமிறக்கியது. ஆனால் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களை கொண்டு வீடு வீடாக பிரசாரத்தை மேற்கொண்டது. இது இக்கட்சியின் பழைய யுக்தியாகும். இந்த யுக்தி வெற்றிக்கு கைகொடுக்கும் என்றும் கட்சி தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் கட்சி வெற்றி பெற்றுவிட்டால் 27 ஆண்டுக்கால பாஜகவின் சாதனை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As the Gujarat election results are to be announced today, the BJP has yet to break the achievements of the Congress in the state. The question has been widely raised whether the achievements of the Congress will be broken at least in this election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X