For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் - தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்.. மூன்று வீரர்கள் வீரமரணம்

Google Oneindia Tamil News

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

அனந்த்நாக்கில் அமைந்துள்ள சிஆர்பிஎப் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள், திடீர் தாக்குதல் நடத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலுக்கு சிஆர்பிஎப் வீரர்களும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.

In Jammu and Kashmir, the terrorists are atrocities. Three CRPF soldiers are heroic deaths

அனந்த்நாக் மாவட்டம் கே.பி. சாலை பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் - தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதலில்3 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள நிலையில், மேலும் 5 வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ள வீரர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் மீண்டும் ரணகளம்... பாஜகவினர் மீது போலீஸ் தடியடி மேற்கு வங்காளத்தில் மீண்டும் ரணகளம்... பாஜகவினர் மீது போலீஸ் தடியடி

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அனந்த்நாக் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் - தீவிரவாதிகள் இடையிலான துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. சம்பவ இடத்திற்கு கூடுதல் படைகளை அனுப்ப உயரதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட பகுதியில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் பதுங்கி உள்ள தீவிரவாதிகள் தொடர்ந்து துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பதிலக்கு பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய தாக்குதுலில், தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

English summary
Three soldiers were killed in an attack in Anantnag area of Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X