For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீநகரில் கை, கால்களை உறைய வைக்கும் குளிர்.. 11 ஆண்டுகளில் இல்லாத குறைவான வெப்பநிலை பதிவு

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் 11ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத குளிர் நிலவவுதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெப்ப நிலையில் மைனஸ் 7 டிகிரி செல்சியசுக்கும் கீழே பதிவாகி உள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத சீதோஷ்ணநிலை காணப் படுகிறது. கடந்த 13ம் தேதி ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலையானது 12 புள்ளி 8 டிகிரி செல்சியசாக இருந்தது.

in jammu and kashmir, srinagar experiences coldest december night in 11 years

அதனை தொடர்ந்து சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

இந்த வெப்பநிலையானது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலையாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான குளிர் மற்றும் பனியின் காரணமாக, புகழ்பெற்ற தால் ஏரி உறைந்து காணப்படுகிறது.

நகரில் குடிநீர் வினியோகத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீர் உறைந்து போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, தெற்கு காஷ்மீர் பகுதியிலும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

மாநிலத்தின் மற்ற பகுதிகளான குல்மார்க், லேஹ், பாஹல்காம் ஆகிய பகுதிகளிலும் கடும் பனி நிலவி வருகிறது. இதே காலநிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று ஜம்முகாஷ்மீர் மாநில வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

English summary
At minus 6.8 degrees Celsius Srinagar recorded the coldest December after over a decade, as a severe cold wave swept through the Kashmir Valley and the Ladakh region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X