For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். ராணுவ தளபதி அடுத்த மாதம் ஓய்வு பெறுவதால் எல்லையில் தொடர் தாக்குதல்?

By Mathi
Google Oneindia Tamil News

பாக். ராணுவ தளபதி அடுத்த மாதம் ஓய்வு பெறுவதால் எல்லையில் தொடர் தாக்குதல்?

ஸ்ரீநகர்: நடத்தி வருவதாக புலனாய்வு அமைப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்றது முதல் இந்தியாவுடனான நல்லுறவுகளை கட்டியெழுப்ப முயற்சித்து வருகிறார். ஆனால் பாகிஸ்தான் ராணுவமும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவிரவாத குழுக்களும் இந்த முயற்சியை சீர்குலைக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

Ashfaq Parvez Kayani

அதுவும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட முறை எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. நேற்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே எல்லையில் பார்வையிட்டு வந்த பின்னர் இரவு முழுவதும் விடிய விடிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியும் உள்ளார்.

அடுத்த மாதம் ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து கயானி ஓய்வு பெற உள்ளார். அதற்கு முன்பு இந்திய ராணுவத்தினர் மீது எவ்வளவுக்கதிமாக தாக்குதல் நடத்த முடியுமோ அவ்வளவு தாக்குதல்களை நடத்தி இருதரப்பு உறவை முற்றிலும் சீர்குலைக்கச் செய்துவிடும் நோக்கத்திலேயே தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் தெரிவித்துள்ளன.

இதன்மூலம் ராணுவத்தினர் மத்தியில் தமக்கான செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ளும் கயானியின் யுக்தி இது என்றும் புலனாய்வு வட்டாரங்கள் விமர்சிக்கின்றன.

English summary
Pakistani troops fired guns and mortars on at least 50 Indian border posts overnight in Kashmir, killing one jawan and injuring six in a show of major aggression. Indian intelligence agencies say the escalating tension is being driven at least in part by the impending retirement of the Pakistani army chief General Ashfaq Parvez Kayani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X