For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலப்புரத்தில் மதத்தின் பெயரால் பிஞ்சுக் குழந்தைகளுக்கு எமன் ஆகும் இஸ்லாமிய அமைப்புகள்

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தடுப்பூசி போட முஸ்லீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கேரளாவில் 2 குழந்தைகள் டிப்தீரியா நோயால் பலியாகியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக டிப்தீரியா நோய் இல்லாமல் இருந்தது. பாக்டீரியாவால் ஏற்படும் டிப்தீரியா நோயால் தொண்டை பாதிக்கப்பட்டு பின்னர் மரணம் ஏற்படக்கூடும்.

இந்நிலையில் முஸ்லீம் அமைப்புகள் தடுப்பூசி போடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி தடுப்பூசி போட வருபவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் மலப்புரத்தில் தற்போது டிப்தீரியா பரவி வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர். 10 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளை டிப்தீரியா தாக்கி வருகிறது. தடுப்பூசி போடாத குழந்தைகளையே டிப்தீரியா தாக்கி வருகிறது.

சில முஸ்லீம் அமைப்புகள் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி போடுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றன. முஸ்லீம் அமைப்புகளில் உள்ள அனைவரும் அல்ல மாறாக சிலர் தான் தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக சில முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 3 லட்சத்து 42 ஆயிரத்து 657 குழந்தைகளில் 23 ஆயிரத்து 912 பேருக்கு எந்த தடுப்பூசியும் போடப்படவில்லை. தடுப்பூசி போடப்படாதவர்களில் 6 ஆயிரத்து 132 குழந்தைகள் இரண்டு வயதுக்குட்பட்டவர்கள்.

English summary
Some muslim groups are campaigning against vaccination in Malappuram district in Kerala. Their campaign has already cost the lives of two kids.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X