For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க கொளுத்துனதே உங்க கார்தான் பாஸ்.. சக உறுப்பினர் வாகனத்திற்கே தீ வைத்த கர்னி சேனா!

டெல்லி பள்ளி வாகனத்தை தாக்கிய கர்னி சேனா அமைப்பு தற்போது வாகனம் ஒன்றை கொளுத்தி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

போபால்: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்த பத்மாவத்க்கு பெரிய எதிர்ப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தானின் சித்தூர் அரசி பத்மாவதி குறித்த படம் என்பதால் ராஜஸ்தானை சேர்ந்த பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தப்படம் வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி ராஜ்புத் கார்னி சேவா, ஆர்.எஸ்.எஸ்,அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. டெல்லி பள்ளி வாகனத்தை தாக்கிய கர்னி சேனா அமைப்பு தற்போது வாகனம் ஒன்றை கொளுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் போபாலில் நடந்து இருக்கிறது. இது அந்த குழுவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வெளியானது

வெளியானது

பல தடைகளை தாண்டி சில மாநிலங்களில் மட்டும் இந்த படம் வெளியானது. ஆனாலும் குஜராத், உபி போன்ற மாநிலங்களில் இந்த படத்திற்கு எதிராக கலவரம் நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது.

 தொடரும் வன்முறை

தொடரும் வன்முறை

இதனால் பல தியேட்டர்கள் தாக்கப்பட்டது. எல்லை மீறிய கர்னி சேனா அமைப்பு டெல்லியில் பள்ளி வாகனத்தை எல்லாம் தாக்கியது. இதனுள் மாணவர்கள் இருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இருக்கிறது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கார்

கார்

இந்த போராட்டம் நேற்று உபியில் பெரிய அளவில் நடந்தது. பார்க்கும் பொருட்கள் அனைத்திற்கும் அவர்கள் தீ வைத்தார்கள். இதில் பல கார்கள் கொளுத்தப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் வாழ்க்கை இதனால் பாதிக்கப்பட்டது.

 அவர்கள் கார்

அவர்கள் கார்

இதில் அவர்கள் சொந்த உறுப்பினர் ஒருவரின் காரையே கொளுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கே தெரியாமல் இந்த தவறு நடந்து இருக்கிறது. அந்த உறுப்பினர் இதுகுறித்து அமைப்பின் முக்கிய உறுப்பினர்களிடம் புகார் அளித்து இருக்கிறார். இது அந்த குழுவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Karni Sena has done wrong activities against Padmaavat. They smashed a school bus in Delhi. Now In Padmaavat riot Karni Sena Men torches their own member's car.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X