For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகாரில் மின்னல் தாக்கி கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பலி

பீகாரில் மின்னல் தாக்கி கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பலி

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்வில் பங்கேற்றவர்களுக்கு SC, ST Marking | மின்னல் தாக்கி 11 பேர் பலி- வீடியோ

    பாட்னா: பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 11 பேர் பலியாகியுள்ளனர்.

    பீகாா் மாநிலத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பயங்கர இடி மின்னலுடன் பலத்த மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனா்.

    In past 24 hours 11 people dead in Bihar due to lighting

    10 வயது சிறுமிகள் இருவரும் இதில் பரிதாபமாக பலியாயினர்.மேலும் பலா் காயமடைந்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நித்திஷ்குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உரிய மருத்துவ வசதி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    மின்னல் தாக்கி ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து வடகிழக்கு மாவட்டங்களான அரியியா, பூர்ணி, கிஷங்கன்ஜ், கத்திஹர், சப்ளால், காகரியா மற்றும் சஹர்சா போன்ற மாவட்டங்களிலும் கடுமையான மழை பெய்ததுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசியது.

    இதன் காரணமாக விவசாய நிலங்களில் உள்ள பயிா்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வீடுகள் பலத்த சேதமடைந்தன. மீட்பு குழுவினா்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனா்.

    இதைத்தொடர்ந்து காயமடைந்தவா்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சையும் செய்து தரப்பட்டுள்ளது. சேதம் ஏற்பட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாாிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

    English summary
    Eleven people, including two children, died due to lighting and heavy storms in several parts of Bihar. In past 24 hours 11 people dead in Bihar due to lighting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X