For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

28 மாநிலங்கள், 28 வாரங்கள், 28 வேலைகள்.. இப்படியும் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்!

Google Oneindia Tamil News

ஒடிசா: தன்னுடைய மன மகிழ்ச்சிக்காக, முன்னாள் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர் 28 வாரங்களில், கிட்டதட்ட 28 விதமான வேலைகளை, 28 வெவ்வேறு பகுதிகளில் செய்துள்ளார்.

நமக்கான சரியான வேலையை தேர்ந்தெடுப்பது என்பது மிக கடினமான முடிவை எடுக்க இதற்காக பல வருடங்களுக்கு நாம் அந்த வேலையில் நிலைத்திருக்க வேண்டியுள்ளது.

சில பேருக்கு இது எளிதாக அமைந்து விடுகிறது.ஆனால்,அதனுடைய சுயரூபம் பல நாட்கள் கழித்துதான் நமக்கு தெரியவரும் அது நமக்கான வேலை அல்ல என்று.

எலியை துரத்தும் பொறியியல் வேலை:

எலியை துரத்தும் பொறியியல் வேலை:

ஜுபனேஸ்வா மிஸ்ரா, ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இவர் தனது கனவு பணியான மென்பொருள் துறையில் நுழைந்தார்.ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்புதான் அவருடைய வாழ்க்கையில் இந்த எலியை துரத்தும் வேலை போன்ற பணி தனக்கு ஏற்புடையதல்ல என்பதை கண்டறிந்தார்.

மனம் விரும்பும் பணி:

மனம் விரும்பும் பணி:

ஆனாலும் தன்னுடைய மனம்தளராத முயற்சியால், தன்னுடைய மனதிற்கு உகந்த வேலை எது என்பதை கண்டறியும் வேலையை ஆரம்பித்தார்.

ஒடிசாவின் மென்பொறியாளர்:

ஒடிசாவின் மென்பொறியாளர்:

ஒடிசாவின் 29 வயது முன்னாள் மென்பொருள் வல்லுனரான அவர் ஆலப்புழாவின் நீர்பிரதேசத்தில் ஒரு படகுவீடு ஓட்டுனருக்கு உதவியாளர், மலைபிரதேச குப்பை சேகரிப்பாளர், தமிழ்நாட்டில் சுண்டல் விற்பனையாளர் என பல வேலைகளை செய்துள்ளார்.

ஒருவார வேலை திட்டம்:

ஒருவார வேலை திட்டம்:

இந்த எல்லா வேலைகளும் ஒரு வார கால கட்டம் கொண்டவைதான். இந்த "ஒரு வார வேலை" திட்டம். இத்திட்டதின் படி ஜுபனேஸ்வா 28 வேலைகளை, 28 பல்வேறு பகுதிகளில், 28 அடுத்த அடுத்த வாரங்களில் மே 2013 முதல் டிசம்பர் 2013 வரை செய்துள்ளார்.

தசாவதார மிஸ்ரா:

தசாவதார மிஸ்ரா:

ஹரியானாவில் புகைப்படக்காரர், அசாமில் தேயிலை பறிப்பவர், அமிர்தசரஸ் பொற்கோவிலில் சேவகர் என பல அவதாரங்களை தசாவதார கண்ணன் போல் மேற்கொண்டுள்ளார் இவர்.

கனவுகளை சிதைக்காதீர்கள்:

கனவுகளை சிதைக்காதீர்கள்:

"பெற்றோரின் ஆசைக்காகவும், சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் இளைஞர்கள் பெரும்பாலும் எஞ்சினியரிங் மற்றும் மருத்துவத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நடைமுறையைதான் நான் உடைத்தெரிந்து அவர்களின் கனவிற்கான உற்சாகத்தை அளிக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

நம்பிக்கை பாலம்:

நம்பிக்கை பாலம்:

இவருடைய பயணமானது இளைஞர்கள் தங்களுடைய கனவுகளை கண்டறிய ஒரு பாலமாக அமையும் என கூறியுள்ளார்.

விளையாட்டு பணி கடினம்:

விளையாட்டு பணி கடினம்:

தற்போது ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக திகழும் இவர் தான் செய்த வேலைகளிலேயே விளையாட்டு ஆசிரியர் பணிதான் கடினம் என்றும், ஆனால்,தனக்கான பணியாக அதைதான் தேர்ந்தெடுத்து வருங்காலத்தில் ஒரு பள்ளிகூடத்தை ஆரம்பிக்க போவதாகவும் கூறியுள்ளார் இந்த வித்யாசமான மனிதர்.

முகப்புத்தக பக்கம்:

முகப்புத்தக பக்கம்:

இவரது ஃபேஸ்புக் பக்கமான "ஒன் வீக் ஜாப் இந்தியா" கிட்டதட்ட 8,000க்கும் மேற்பட்டவர்களால் விரும்பி பார்க்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Choosing a career can be a difficult decision, one which requires years of pondering. But, some people have it easy and let others make that crucial decision for them and end up hating what they do for the rest of their lives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X