For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை கூட பெற முடியாத பாஜக.. இது ராஜஸ்தான் பரிதாபம்

Google Oneindia Tamil News

Recommended Video

    எக்சிட் போல் கணிப்பு நடக்குமா ? ராஜஸ்தானில் முன்னிலை பெரும் காங்கிரஸ்

    ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த தேர்தலில் பாஜக பெற்றதில் பாதியை கூட இம்முறை எட்டவில்லை என்பது அக்கட்சிக்கு பேரதிர்ச்சியாகும்.

    ராஜஸ்தானில் மொத்த சட்டசபை தொகுதிகள், 200. பெரும்பான்மைக்கு 101 தொகுதிகள் போதுமானது. ஆனால், கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற, சட்டசபை தேர்தலில், பாஜக இங்கு, அபாரமாக 163 தொகுதிகளை வெற்றி பெற்றது. அதாவது சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான தொகுதிகளை பாஜகதான் வென்றது.

    In Rajasthan BJP losing its ground but Congress gains

    காங்கிரஸ் கட்சி, 21 தொகுதிகளை வென்றது. மற்றவர்கள் 16 தொகுதிகளை கைப்பற்றினர். இம்முறை மதியம் 12 மணி நிலவரப்படி, ராஜஸ்தானில் பாஜக 78 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

    இதன் மூலம், கடந்த தேர்தலைவிடவும் பாதிக்கும் குறைவான இடங்களைத்தான் பாஜக பெறப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம், காங்கிரசுக்கு சுமார் 5 மடங்கு வளர்ச்சியாகும். கடந்த தேர்தலில் பாஜக பெற்றதை போன்ற பிரமாண்ட வெற்றியை பெற முடியவில்லை என்றபோதிலும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் நிலைமையை விட இம்முறை மேம்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

    English summary
    In Rajasthan BJP losing it's ground but Congress gains from 21 seats to near mejority.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X