For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்று வரை கடவுள்... இன்று சாக்கடையில் படங்கள்... குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பக்தர்கள் வெறுப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் புகைப்படங்கள் இப்போது சாக்கடையில் வீசப்பட்டு வருகின்றன. அவரை கடவுளாக கொண்டாடிய பக்தர்கள் இப்போது வ

By Devarajan
Google Oneindia Tamil News

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் புகைப்படங்கள் இப்போது சாக்கடையில் வீசப்பட்டு வருகின்றன. அவரை கடவுளாக கொண்டாடிய பக்தர்கள் இப்போது வெறுப்பின் உச்சத்தில் சிங்கின் படங்களைத் தூக்கி எறிந்து வருகிறார்களாம்.

பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 'தேரா சச்சா சவுதா' மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சாமியார் குர்மீத் சிங்கிற்கு உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அரியானா, பஞ்சாப், டெல்லி, மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.

இப்போது ராம் ரஹீம் பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன. ஒரு தரப்பினர் அவர் வெளியே வருவதை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

பக்தர்கள் கொந்தளிப்பு

பக்தர்கள் கொந்தளிப்பு

மற்றொரு தரப்பினர் சாமியாரின் புகைப்படங்களை வைத்து வழிபட்டது தவறு என உணர்ந்து அவருடைய புகைப்படங்களை குப்பையில் தூக்கி வீசி வருகிறார்கள். சாமியாரின் உண்மை முகம் தெரியவந்ததை தொடர்ந்து கடும் கோபம் கொண்டு உள்ள ஆதரவாளர்கள் அவர் சம்பந்தப்பட்ட பொருட்களை எல்லாம் குப்பையில் வீசி வருகிறார்கள்.

குப்பையில் கிடக்கும் ராம் ரஹீம்

குப்பையில் கிடக்கும் ராம் ரஹீம்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் ராம் ரஹீம் படங்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளன. இது பற்றி அந்தப்பகுதி துப்புரவுத்துறை அதிகாரி, தேவேந்திர ரத்தோர் கூறுகையில், " இந்த முறை நான் வழக்கம்போல ஸ்ரீ கங்காநகர் சென்றேன்.

சாக்கடையில் படங்கள்

சாக்கடையில் படங்கள்

அங்கு குப்பைகளில் ராம் ரஹீம் போட்டோக்கள் நூற்றுக்கணக்கில் வீசப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடவுள் என யாரை மக்கள் பின்தொடர்ந்தார்களோ அவரது புகைப்படத்தை குப்பையில் வீசிவிட்டனர் என்பதே இப்போதைய நிலை.

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

மீரா சவுக் மற்றும் சுகாதியா பகுதியில் புகைப்படங்கள் வீசியதில், கால்வாய் வடிகாலில் நீர் செல்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. ராம் ரஹீம், பிறந்த ஊரான குருசார் முந்தியா ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Officials in Rajasthan’s Sriganganagar found that hundreds of photos of Gurmeet Ram Rahim Singh had been dumped in drains by his followers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X