For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிவியல் துறையில் மிகக் குறைவாக முதலீடு செய்யும் இந்தியா

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: அறிவியல் துறையில் சீனா, அமெரிக்கா, தென்கொரியாவைவிட இந்தியா மிகக் குறைவாகத்தான் முதலீடு செய்வதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அறிவியல் கல்வி தொடர்பாக ஓ.ஆர்.எப். என்ற நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒதுக்கீடு

இந்தியாவின் ஒதுக்கீடு

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 0.88% மட்டுமே அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அமெரிக்கா, தென்கொரியா

அமெரிக்கா, தென்கொரியா

ஆனால் அமெரிக்காவோ உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 7 முதல் 8% வரை அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒதுக்குகிறது. தென்கொரியாவோ 3-4% வரை ஒதுக்கீடு செய்கிறது. சீனாவும் கணிசமான அளவுக்கு ஒதுக்கீடு செய்கிறது.

அடிப்படை ஆராய்ச்சி

அடிப்படை ஆராய்ச்சி

அப்படி ஒதுக்கப்படும் நிதியில் இந்தியாவில் அறிவியல் துறையின் அடிப்படை ஆராய்ச்சிக்கு 25% செலவிடப்படுகிறது. ஆனால் சீனாவிலோ அடிப்படை ஆராய்ச்சிக்கு 5%தான் செலவிடப்படுகிறது. ஆனால் அமெரிக்காவோ அடிப்படை ஆராய்ச்சிக்கு 17% நிதி ஒதுக்கியுள்ளது.

குறைவான எண்ணிக்கை

குறைவான எண்ணிக்கை

இதேபோல் இந்தியாவின் அறிவியல் மற்றும் பொறியியல்துறை பட்டதாரிகளின் எண்ணிக்கையும் சீனாவை விட மிகக் குறைவானதாக இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A report by a thinktank shows India's investment in science has lagged behind that of neighbouring China, the US and South Korea, resulting in these countries staying ahead when it comes to research.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X