For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டுவிட்டரில் மோடி பற்றி பேசியவர்கள் தான் அதிகமாம்... 2வது இடத்தில் கெஜ்ரிவால்!

|

டெல்லி: சமூக வலைதளமான டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் குறித்த கருத்து பரிமாற்றத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதலிடத்தையும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

9 கட்டங்களாக நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப் படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் வாயிலாக நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.

In This Election Season, 56 Million Tweets and Counting

இந்நிலையில், சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களும், பிரபலங்களும் தங்கள் கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, அதிக கருத்துப்பரிமாற்றம் மோடியைக் குறித்து நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மொத்தம் 5.60 கோடி பேர்....

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மே 12-ந் தேதி வரையிலான காலத்தில் அரசியல் நிலவரம் குறித்து டுவிட்டரில் கருத்து பரிமாற்றம் செய்தவர்கள் மொத்தம் 5.60 கோடி பேர்.

மோடி பற்றி பேசியவர்கள்....

இதில், நரேந்திர மோடி குறித்து தங்களது எண்ணங்களை வெளியிட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் 1.10 கோடியாம். இது ஒட்டுமொத்த பரிமாற்றத்தில் 20 சதவீதம் ஆகும்.

பாஜக பற்றி கலந்துரையாடியவர்கள்...

அதேபோல், பாரதீய ஜனதா கட்சி குறித்து 60 லட்சம் பேர் கலந்துரையாடி உள்ளனர். இது ஒட்டுமொத்த பரிமாற்றத்தில் 11 சதவீதம் ஆகும்.

மோடியைத் தொடர்ந்து கெஜ்ரிவால்....

மோடிக்கு அடுத்த இடத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இவரைக் குறித்து 50 லட்சம் பேர் கருத்துப் பரிமாற்றம் செய்துள்ளனர். ஆனால், ஆம் ஆத்மி கட்சி குறித்து விசாரித்தவர்கள் 82 லட்சம் பேர்.

13 லட்சம் மட்டும் தான்...

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்து விசாரித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சமாக மட்டுமே உள்ளது.

ஒலிம்பிக்கை தோற்கடித்த தேர்தல்...

நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியை டுவிட்டரில் விசாரித்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியாக இருந்தது. ஆனால், அதைக்காட்டிலும் லோக்சபா தேர்தல் கருத்து பரிமாற்றம் செய்தவர்கள் எண்ணிக்கை 1.60 கோடி அதிகமாகும்.

இன்னும் எண்ணிக்கை கூடலாம்...

இன்று லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப் பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதால் அது குறித்து விசாரிப்பவர்கள் எண்ணிக்கை பல லட்சத்தை தாண்டும் என டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூகிள் டிரெண்டு...

அதேபோல், கூகிள் டிரெண்டில் அரசியல் தொடர்பான கருத்துப் பரிமாற்றத்தில் மோடி முதலிடத்திலும், பிரதமர் மன்மோகன்சிங் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

English summary
Twitter India attempted to quantify political activity on its platform today when it released comprehensive election data, which showed that nearly 56 million election-related tweets were posted from Jan. 1 to May 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X