For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தரை அதிர... தண்ணீர் தெறிக்க... வாகா எல்லையில் இந்திய வீரர்கள் கம்பீர அணிவகுப்பு!!!

குடியரசு தினத்தையொட்டி வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கண்டுகளித்தனர்.

Google Oneindia Tamil News

வாகா: பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் சிறப்பு கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் நடத்திய கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் நாள்தோறும் தேசியக் கொடி ஏற்றம் மற்றும் கொடியிறக்கம் நடைபெறுவது வழக்கம். இன்று குடியரசு நாள் என்பதால் ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்புடன் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தப்படி கலந்துகொண்டனர். இதில் ஏராளமான ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தியப் படையின் தீரத்தை வெளிப்படுத்தும் வகையில் தரை அதிர அவர்கள் நடத்திய கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
ராணுவ வீரர்களின் அணிவகுப்பின் போது இன்குலாப் ஜிந்தாபாத், ஜெய்ஹிந்து என விண் அதிர எல்லையில் மக்கள் வீர முழக்கமிட்டனர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற இந்த கண்கவர் அணிவகுப்பை இந்திய மக்கள் மட்மின்றி எல்லையைக் கடந்து பாகிஸ்தான் மக்களும் கண்டுகளித்தனர்.

English summary
In Wagah border a magnificent parade of soldiers was held on the occasion of Republic Day. The thousands of audience participated regardless of the pouring rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X