For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல்நிலையத்தில் மனைவியுடன் இளைஞரை பின்னி எடுத்த ஐஏஎஸ் அதிகாரி.. காரணம் இதுதான்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா:முகநூலில் தரக்குறைவாக பதில் பதிவு செய்ததாக கூறி இளைஞர் ஒருவரை ஐஏஎஸ் அதிகாரியும், அவரது மனைவியும் அடித்து வெளுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அலிபூர்துவார் மாவட்ட ஆட்சியரான நிகில் நிர்மலின் மனைவியை தரக் குறைவாக விமர்சித்த புகாரின் பேரில் வினோத் குமார் சர்கார் என்ற இளைஞர் மீது ஃபலாகட்டா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரும் அவரது மனைவியும் சௌமியாஜித் ராய் என்னும் போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

in west bengal, an ias officer nikhil nirmal beats up youth goes viral

வலி தாங்க முடியாத அந்த இளைஞர் தான் செய்தது தவறு என்றும், தன்னை மன்னித்து விடுமாறும் கெஞ்சியுள்ளார். ஆனால், நிக்கில் நிர்மல், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டத்தில் தன்னை எதிர்த்து யாரும் பேச மாட்டார்கள் என்றும், அரைமணி நேரத்தில் உன்னை சிறையில் வைக்க முடிந்த என்னால், உன் வீட்டிற்கே வந்து கொலையும் செய்ய முடியும் என்றும் மிரட்டியுள்ளார்.

அதேபோல, நந்தினி கிஷானும், இதுபோன்ற பதிவுகளை உன்னை எழுத தூண்டியது யார் என்றும் கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதற்கிடையில், வினோத் குமார் சர்காரின் தொலைபேசியை கைப்பற்றிய இருவரும், சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த பதிவை சத்தமாக படிக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.

அந்த இளைஞன் அமைதியாக இருந்ததால், அடித்தும் உதைத்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர். காவல் நிலையத்துக்கு வந்த நிகில் நிர்மலும், அவரது மனைவியும் சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொண்டு இளைஞரை சரமாரியாக தாக்கியதை போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்தனர்.

இந்த சம்பவம் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காணொலி தற்போது வைரலாகியுள்ளதால் ஐஏஎஸ் அதிகாரி விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்டுள்ளார்.

English summary
A video went on viral on social media, an ias officer in West Bengal thrashed a youth inside police station for allegedly making comments about his wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X