For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிளாஸ் ரூமில் கட்டிப்பிடித்து.. தகாத செயலில் ஈடுபட்ட 2K கிட்ஸ் மாணவர்கள்.. கொந்தளித்த பொதுமக்கள்!

Google Oneindia Tamil News

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் சில மாணவ - மாணவிகள் தகாத செயலில் ஈடுபட்ட விடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்கள், இணையம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த காலத்து இளைஞர்கள் மிக எளிதாகத் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். பள்ளிகளிலேயே அவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் இப்படித்தான் சில மாணவ- மாணவிகள் பள்ளி வகுப்பறையிலேயே தகாத செயல்களில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூகுளுக்கு ஆஸ்திரேலியா கோர்ட் விதித்த மில்லியன் டாலர் அபராதம்; ஏன் தெரியுமா? கூகுளுக்கு ஆஸ்திரேலியா கோர்ட் விதித்த மில்லியன் டாலர் அபராதம்; ஏன் தெரியுமா?

அசாம்

அசாம்

அசாம் மாநிலம் சில்சார் பகுதியில் ராமானுஜ் குப்தா பியூ கல்லூரி இயங்கி வருகிறது. அது இரு பாலரும் படிக்கும் பியூ கல்லூரியாகும். இதனிடையே அங்கு +1 படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறையிலேயே தகாத செயலில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மொத்தம் 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோ

வீடியோ

இணையத்தில் வெளியான அந்த வீடியோவில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் வகுப்பறையிலேயே ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டும், சீண்டி விளையாடிக் கொண்டும் இருந்துள்ளனர். அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவர் இந்த வீடியோவை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மூன்று பெண்களும், நான்கு ஆண்களும் உள்ளனர்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், பொதுமக்கள் பலரும் மாணவர்களின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் நடவடிக்கையைக் கண்காணிக்கத் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினர். இந்த விவகாரம் கல்லூரி நிர்வாகத்திற்குக் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதையடுத்து இதில் சம்மந்தப்பட்ட மாணவ- மாணவிகளை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் மாணவ- மாணவிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறி உள்ள கல்லூரி நிர்வாகம், சம்மந்தப்பட்ட மாணவ மாணவிகளை விளக்கம் தரும் வரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பின்னர், அவர்கள் மீது மேலும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

விளக்கம்

விளக்கம்

இந்தச் சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் பூர்ணதீப் சந்தா கூறுகையில், "ஆசிரியர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மாணவர்கள் இந்த ஒழுங்கீன செயலில் ஈடுபட்டு உள்ளனர். எங்கள் கல்லூரி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. மேலும் வளாகத்தில் மொபைல் போன்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புதிதாகக் கல்லூரியில் சேர்ந்தவர்கள்" என்றார்.

English summary
Assam students hugging in the classroom: (அசாமில் வகுப்பறையில் தகாத செயலில் ஈடுபட்ட மாணவர்கள்) Assam students suspended for inappropriate act in the classroom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X