For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி சன்மானம்.. வருமானத்துறை அதிரடி அறிவிப்பு

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கருப்புப்பணம் விவகாரம்...தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி சன்மானம்..வீடியோ

    டெல்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

    வரி ஏய்ப்பை தடுக்கவும், வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்கவும் மத்திய அரசும் வருமான வரித்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் தொடர்பாக வருமான வரித்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. அதாவது வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் தொடர்பாக தகவல் தருவோருக்கான சன்மானத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

    வெகுமதி திட்டம்

    இதுதொடர்பாக வருவமான வரித்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்துள்ளது. அதாவது பினாமி பரிவர்த்தனைகள் Informants Reward Scheme, 2018" என்று தலைப்பிடப்பட்ட ஒரு புதிய வெகுமதி திட்டத்தை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரித் துறையின் முயற்சிகளில் மக்கள் பங்கு பெறுவதை அதிகரிக்கவும் வரி ஏய்ப்பை குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களை ஊக்குவிக்க

    இந்த வெகுமதித் திட்டம், மறைமுக முதலீட்டாளர்கள் மற்றும் அத்தகைய சொத்துக்களில் பெறப்பட்ட வருமானம், அதே போல் பினாமி பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துக்களை பற்றிய தகவல்களை வழங்க மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

    ரூ. 50 லட்சம் சன்மானம்

    இத்திட்டத்தின் கீழ், ஒரு நபர் குறிப்பிட்ட முறையில் தகவலை வழங்கினால் 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும். வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் தந்தால் ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.

    ரகசியமாக வைக்கப்படும்

    இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற வெளிநாட்டினரும் தகுதியுடையவர்கள் ஆவர். வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி வரை சன்மானம் தரப்படும்.தகவல் தருவோரின் விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

    English summary
    Income tax department has announced reward scheme to reduce tax evasion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X