For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய வரைபடத்தை தவறாக காண்பிக்கிறது கூகுள்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய வரைபடத்தை பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு விதமாக கூகுள் நிறுவனம் காண்பிக்கிறது இது தவறானது என்று மக்களவையில் மத்திய இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தூர் தெரிவித்தார்.

Incorrect map of India on Google websites: Govt

லோக்சபாவில் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்திருந்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தூர் "இந்தியாவின் வரை படத்தை வெவ்வேறு வகையாக கூகுள் காண்பிப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து இந்திய நிலவியல் துறை ஆய்வு செய்தது. அப்போது www.google.co.in (இந்தியா), www.google.pk (பாகிஸ்தான்), www.google.org(பொதுவானது) ஆகிய கூகுளின் வெவ்வேறு நாட்டுக்கான வெப்சைட்டுகளில் இந்திய மேப் வெவ்வேறு வகையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தகவல் தொடர்பு சட்டப் பிரிவு 69-ஏ படி இது குற்றமாகும். இதுபோன்ற புகார்களை பெற நிலவியல் துறையில் நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் காஷ்மீர் எல்லையிலும், சீனாவுடன் அருணாச்சல பிரதேச எல்லையிலும் இந்தியாவுக்கு தகராறு இருந்து வருகிறது. எனவே பாகிஸ்தானில் உள்ள கூகுள் வெப்சைட்டில் இந்தியாவின் காஷ்மீரின் பல பகுதிகள் பாகிஸ்தானில் இருப்பதை போலவும், சீனாவில் அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகள் சீனாவில் இருப்பதை போலவும் காண்பித்து ஏமாற்றி வந்துள்ளது கூகுள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Survey of India has found out that Google is displaying incorrect map of India on its different websites, the government today said. In a written reply to a question in the Lok Sabha, Minister of State in the Information and Broadcasting Ministry Rajyavardhan Rathore said that after complaints regarding display of incorrect map were received, Survey of India had looked in to the matter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X