For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுதந்திர தின கொண்டாட்டம்: கூகுள், யூடியூபுடன் மத்திய அரசு ஒப்பந்தம்.. இனி லைவில் பார்க்கலாம்!

இந்திய சுதந்திர கொண்டாட்டத்தை யூடியூபில் நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடியும் வகையில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய சுதந்திர கொண்டாட்டத்தை யூடியூபில் நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடியும் வகையில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவின் 72வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Independence Day: The whole celebration to be live-streamed on YouTube

இந்த நிலையில் நாளை டெல்லி ராஜவீதியில் நடக்க உள்ள, சுதந்திர அணிவகுப்பு கொண்டாட்டத்தை யூடியூப் நேரில் ஒளிபரப்ப உள்ளது. மத்திய அரசின் பிரசாத் பாரதி இந்த ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது.

நாளை நடக்கும் எல்லா நிகழ்வுகளும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதற்காக கூகுள் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனேவே உலகில் சில நாட்டு அரசு நிகழ்வுகளை மட்டுமே யூடியூப் இப்படி ஒளிபரப்பு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்பு விழா இப்படி ஒளிபரப்பப்பட்டது.

சென்ற வருடம் இந்திய சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் மக்கள் அதிக அளவில் யூடியூபில் பார்த்தனர். இதனால் இந்த முறை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

English summary
Public broadcaster, Prasad Bharti has tied up with Google and video sharing site, YouTube to live stream the speech of Prime Minister Narendra Modi on Independence Day. The move is aimed at reaching out to the digital generation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X