For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேகாலயாவில் காங். அல்லாத ஆட்சி அமைக்க சுயேச்சை ஆதரவு

மேகாலயாவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்க சுயேச்சை உறுப்பினர் ஆதரவு தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஷில்லாங்: மேகாலயாவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்க சுயேச்சை உறுப்பினர் சாமுவேல் சங்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவகள் நேற்று வெளியாகின. அதில் திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்கள் விடை கொடுத்துவிட்டு பாஜக கூட்டணிக்கு வாக்களித்தனர்.

 Independent MLA supports to form a new government without Congress

ஆனால் நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் எந்த கட்சிக்கம் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. அதிலும் மேகாலயாவில் தேர்தல் நடத்தப்பட்ட 59 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், இதர கட்சிகள் 17 இடங்களிலும் பாஜக இரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க 31 இடங்கள் பெரும்பான்மை தேவை. ஆனால் இங்கு காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சட்டபடி காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற்றுள்ளதால் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரின.

இங்கு தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு (பிஏ சங்மா கட்சி)/ அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையவே வாய்ப்புள்ளது.

இதனிடையே காங்கிரஸ் அல்லாத அரசு அமைய தான் ஆதரவு அளிப்பதாக சுயேச்சை வேட்பாளர் சாமுவேல் சங்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.

English summary
Independent MLA Samuel Sanga supports to form a new government without Congress in Meghalaya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X