For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவும் அகதிகளிடம் இருந்து குழந்தையை பிரித்துள்ளது.. எப்படி என்று பாருங்கள்!

தஞ்சமடையும் அகதிகளிடமிருந்து அமெரிக்க அரசு குழந்தைகளை பிரிக்க எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்தியாவும் இதே வேலையை செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்கா போல இந்தியாவும் அகதிகளின் குழந்தைகளை பிரித்துள்ளது- வீடியோ

    டெல்லி: தஞ்சமடையும் அகதிகளிடமிருந்து அமெரிக்க அரசு குழந்தைகளை பிரிக்க எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்தியாவும் இதே வேலையை செய்துள்ளது.

    எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதியில் இருந்து மே மாதம் 31ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களிடம் இருந்து அவர்களது குழந்தைகளை பிரித்து வைக்கப்பட்டனர்.

    ட்ரம்புக்கு எதிர்ப்பு

    ட்ரம்புக்கு எதிர்ப்பு

    இந்த குழந்தைகள் தங்குவதற்கென டெக்சஸ் நகரில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கூடாரங்கள் அமைத்து அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தடைவிதித்த ட்ரம்ப்

    தடைவிதித்த ட்ரம்ப்

    மேலும் ட்ரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என எதிர்ப்புக்குரல் கிளம்பியது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு அதிபர் ட்ரம்ப் தடை விதித்தார்.

    குழந்தைகளை பிரித்த இந்தியா

    குழந்தைகளை பிரித்த இந்தியா

    இந்நிலையில் இந்த காரியத்தை இந்தியாவும் அரங்கேற்றியுள்ளது. அதாவது, வங்கதேசத்தில் இருந்து தஞ்சமடைந்த அகதிகளிடமிருந்து அவர்களின் குழந்தையை பிரித்தது இந்தியா.

    சிரிப்பு சத்தம் - கூப்பாடு

    சிரிப்பு சத்தம் - கூப்பாடு

    தெற்கு கொல்கத்தாவில் பெரிய இதயம் வரையப்பட்ட 10 அடி உயர சுவருக்கு பின்னால் இருந்து எப்போதும் சிரிப்பு சத்தமும் பெண்களின் கூப்பாடும் கேட்டுக்கொண்டே இருக்கும். அது சினேகா, இலாப நோக்கற்ற நிறுவனமான சன்லாப் நடத்தும் ஒரு தங்குமிட வீடாகும்.

    8 ஆண்டுகள் சிறை

    8 ஆண்டுகள் சிறை

    1946 வெளிநாட்டினர் சட்டப்பிரிவு 14ஏவின் படி முறையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு அரசு சிறை தண்டனை வழங்கி வந்தது. 2 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை அகதிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    காப்பகத்தில் குழந்தைகள்

    காப்பகத்தில் குழந்தைகள்

    அதன்படி பெற்றோர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் குழந்தைகள் 6 வயதுக்கு மேல் இருந்தால் அவர்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை

    பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை

    இதற்காக மேற்கு வங்கத்தில் ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனியாக 80 முகாம்கள் அமைக்கப்பட்டன. இதுகுறித்து கொல்கத்தா ரிசர்ச் குரூப் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி பாதூரி பாலா என்ற பெண் அகதி வங்க தேசத்தில் இருந்து தனது 2 குழந்தைகளுடன் இந்தியாவுக்கு அகதியாக வந்தார்.

    பெரியவர்களான குழந்தை

    பெரியவர்களான குழந்தை

    முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர் 7 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதன்காரணமாக 4 ஆண்டுகள் அவர் தனது மகனையும் மகளையும் பார்க்காமல் இருந்தார் என்றும் அவர் விடுதலையாவதற்குள் அந்த குழந்தைகள் பதின் வயதை அடைந்துவிட்டார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

    திருத்தப்பட்ட சேவைகள்

    திருத்தப்பட்ட சேவைகள்

    தேசிய குற்ற ஆவணப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,டிசம்பர் 2015 ஆம் ஆண்டில் மேற்கு வங்க மாநில சிறைச்சாலையில் வெளிநாட்டு கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது. மேற்கு வங்கத்தின் திருத்தப்பட்ட சேவைகள் மூலம் கிடைக்கப்பெற்ற சமீபத்திய தகவல்கள் 3,647 வங்க தேசத்தினர் மற்றும் 142 பங்களாதேஷ் சிறுவர்கள் ஏப்ரல் 1, 2016 அன்று அம்மாநில சிறைகளில் சிறை வைக்கப்பட்டனர்.

    விலக்கு அளித்த அமைச்சகம்

    விலக்கு அளித்த அமைச்சகம்

    2012 ஆம் ஆண்டு மே மாதம் உள்துறை அமைச்சகம், கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநாட்டினர் சட்டத்தில் சில விலக்குகளை கொண்டு வந்தது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்க மற்றும் பெண்கள் தங்கன் தாய்நாட்டிற்கு அனுப்பப்படும் முன்பே முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    டாஸ்க் ஃபோர்ஸ்

    டாஸ்க் ஃபோர்ஸ்

    மே 2014 இல், வங்கதேச குடிமக்களை தாய்நாட்டிற்கு அனுப்ப மேற்கு வங்க அரசாங்கம் ஒரு டாஸ்க் ஃபோலை அமைத்தது. இதற்காக வங்கதேசத்தின் அடையாளம் மற்றும் முகவரி சரிபார்க்கப்படும். வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மாநில அரசு முதலில் கோரிக்கை விடுத்துள்ளது.

    English summary
    India has separated Bangladeshi children from their parents for years like US. Bangladesh immigrants are sent to prisons while their children are kept in shelter homes in West Bengal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X