For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா-வங்கதேசம் இடையே எல்லை வரையறை..68 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஒப்பந்தம் கையெழுத்து

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியா- வங்கதேசம் இடையே வரலாற்று சிறப்பு மிக்க எல்லைப் பகுதியை பிரித்துக் கொள்ளும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

இந்தியா வங்கதேசம் இடையே கடந்த 1947 ஆம் ஆண்டு முதல் எல்லைப்பகுதியை பிரித்துக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரை இந்தியாவிற்குட்பட்ட பகுதிகள் வங்கதேச நாட்டிற்குள்ளும், வங்கதசேத்திற்கு சொந்தமான நிலப்பகுதிகள் இந்தியாவிற்குள்ளும் உள்ளன.

india-bangladesh

இவற்றை சீரமைத்து நிரந்தரமாக வரையறை செய்து எல்லைப்பகுதியை நிர்ணயிக்கும் நடைமுறை இதுவரை கையெழுத்தாகவில்லை. அண்மையில் எல்லையை சீரமைக்க இந்தியாவை வங்கதேசம் வலியுறுத்தி வந்தது.

சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திரமோடி வங்கதேசம் சென்றிருந்தார். அப்போது எல்லை பிரச்னைக்குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் இன்று முறைப்படி துவங்குகிறது.

ஒப்பந்தத்தில் உள்ளபடி இந்தியாவிற்குள் 51 பகுதிகளில் உள்ள 7,110 ஏக்கர் நிலப்பரப்பினை வங்கதேசத்திற்கும், வங்கதேசத்திற்குள் 111 பகுதிகளில் உள்ள 17,160 ஏக்கர் நிலப்பரப்பினை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வகையில் எல்லை வரையறை பரிமாறிக்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

68 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதையொட்டி வங்கதேசத்தில் உள்ள குரிக்ராம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மாவட்டம் இந்தியாவுக்கு சொந்தமாகப்போவது குறிப்பிடத்தக்கது.

English summary
Bangladesh and India will this week finally swap tiny islands of land, ending one of the world's most difficult border disputes that has kept thousands of people in stateless limbo for almost 70 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X