For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் இந்த 'ஆப்ஸ்' யூஸ் பண்ண கூடாது.. என்ன காரணம் தெரியுமா?

சில முக்கியமான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பயன்படுத்த கூடாது என சீன எல்லையில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ராணுவ வீரர்கள் இந்த ஆப்ஸ் யூஸ் பண்ண கூடாது.. என்ன காரணம் தெரியுமா?- வீடியோ

    டெல்லி: சில முக்கியமான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பயன்படுத்த கூடாது என சீன எல்லையில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக அந்த அப்ளிகேஷன்களை டெலிட் செய்யும்படியும் ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த அப்ளிகேஷனைகளை டெலிட் செய்ய சொன்னதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு உள்ளது. இதில் அனைத்தும் சீனாவின் தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்காக இந்திய பாதுகாப்புத்துறை கூறியிருக்கும் விளக்கம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.

    நோ ஆப்ஸ்

    நோ ஆப்ஸ்

    சீனா எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் இனி சில முக்கியமான அப்ளிகேஷன்களை பயன்படுத்த முடியாது. அதேபோல் சில கம்பெனி மாடல மொபைல் போன்களையும், மொபைல் உபகாரணங்களையும் பயன்படுத்த முடியாது. மொத்தமாக 40 விதமான ஆப்ஸ்களுக்கு பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது. இவை அனைத்தும் சீனாவில் உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்கள் ஆகும்.

    எதற்காக நடவடிக்கை

    எதற்காக நடவடிக்கை

    இந்த ஆப்ஸ்கள் அனைத்தும் சீனாவில் தங்களது சர்வர்களை வைத்து இருக்கிறது. மிகப்பெரிய ஆப்ஸ்கள் கூட சீனாவில் தங்களது மெயின் சர்வர்களை வைத்து இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சீன எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு அந்த ஆப்களை டெலிட் செய்யும்படி உத்தரவு சென்றுள்ளது. இதன் மூலம் சீன ராணுவம் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    இந்த ஆப்கள் மூலம் சீனா, இந்திய வீரர்களை எளிதாக கண்காணிக்க முடியும். மேலும் ஜி.பி.எஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் எங்கே எல்லாம் செல்கிறார்கள் என்றும் சீனாவால் கண்காணிக்க முடியும். இது இந்திய ராணுவத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரிய பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் 'ஆடியோ பர்மிஷன்' உள்ள சில ஆப்கள் ராணுவ வீரர்கள் பேசுவதை ரெக்கார்ட் கூட செய்யும் என்று கூறப்படுகிறது.

    எந்த ஆப்கள்

    எந்த ஆப்கள்

    இந்த அறிவிப்பில் 40 ஆப்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக பயன்பாட்டில் இருக்கும் எம்.ஐ ஆப்கள் எதுவும் பயன்படுத்தக்கூடாது. மேலும் எம்.ஐ போன்கள், ஹவாய் போன் போன்றவற்றையும் பயன்படுத்தக்கூடாது. சி.எம் பிரவுசர், பியூட்டி பிளஸ், சி.எம் செக்யூரிட்டி, டியூ பிரைவசி போன்ற பிரபல ஆப்களையும் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    The Indian Government has banned 40 China based apps in Indian military. It also directed the troops to delete those 40 Android apps from their phone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X