For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2026ல் ஜெர்மனியை முந்தும் இந்தியா.. உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாறும்! ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: 2026 ஆம் ஆண்டில் ஜெர்மனியை முறியடித்து நான்காவது பெரிய பொருளாதாரம் உள்ள நாடாக இந்தியா மாறும் என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்த நிலையால் உற்பத்தி குறைந்து வேலை வாய்ப்புகள் சரிந்து வரும் நிலையில், அரசின் உள்நாட்டு உற்பத்தி 5 டிரில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா 2024ம் ஆண்டுகள் எட்டுவது எளிதல்ல என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

எனினும் 2026ம் ஆண்டில் இலக்கான 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை 2026ம் ஆண்டில் எட்டுவதற்கு வாய்ப்புஉள்ளதாக கூறப்படுகிறது.

முஸ்லிம்களை குறிவைத்து ஒவ்வொரு தாக்குதலையும் நிகழ்த்தியது உ..பி. போலீஸ்? பகீர் வீடியோக்கள் முஸ்லிம்களை குறிவைத்து ஒவ்வொரு தாக்குதலையும் நிகழ்த்தியது உ..பி. போலீஸ்? பகீர் வீடியோக்கள்

ஜெர்மனியை முந்தும்

ஜெர்மனியை முந்தும்

இது தொடர்பாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2026 ஆம் ஆண்டில் ஜெர்மனியை முறியடித்து நான்காவது பெரிய பொருளாதாரம் உள்ள நாடாக இந்தியா மாறும்.

இந்தியா 3வது இடம்

இந்தியா 3வது இடம்

இதேபோல் 2034 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளது. இந்திய அரசு நிர்ணயித்த இலக்கை 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2026 ஆம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) எட்டும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கடும் போட்டி

கடும் போட்டி

"உலக பொருளாதார லீக் அட்டவணை 2020" என்ற பெயரில் வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் சிஇபிஆர் நிறுவனம். '"பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இரண்டையும் முறியடித்து 2019 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் ஜெர்மனியை , முந்திக்கொண்டு 3வது இடத்தையும், 2034 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய இடத்தையும் இந்தியா பிடிக்கும்" என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது. ஜப்பான், ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகியவை அடுத்த 15 ஆண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு கடும் போட்டியை சந்திக்கும் என்றும் சிஇபிஆர் தெரிவித்துள்ளது.

ரகுராம் ராஜன் பதில்

ரகுராம் ராஜன் பதில்

இதனிடையே பொருளாதார மந்த நிலையால் உள்நாட்டு உற்பத்தி படுமோசமாக இருப்பதால் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு 2024ம் ஆண்டுக்குள் நிறைவேற்றுவோம் என இலக்கு நிர்ணயித்துள்ள 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் உள்நாட்டு உற்பத்தியை எட்டுவது கடினம் என்கிறார்கள். அண்மையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் உள்நாட்டு உற்பத்தி 2024ம்ஆண்டுக்குள் வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார்.

பொருளாதார நிபுணர்

பொருளாதார நிபுணர்

இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் விரைவான பொருளாதார முன்னேற்றம் இருந்தபோதிலும், இது அமெரிக்காவிற்கும் உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் மேலாதிக்கத்திற்கும் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வியக்கத்தக்கது என்றும் செபரின் மூத்த பொருளாதார நிபுணர் பப்லோ ஷா கூறினார்.

மெதுவான வளர்ச்சி

மெதுவான வளர்ச்சி

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரம் என்று சமீபத்தில் பாராட்டப்பட்ட இந்தியா, 2019-20 செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி விகிதம் ஆறு ஆண்டு குறைந்து 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டில் நிலவும் மெதுவான வளர்ச்சி, தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

English summary
India can beat Germany to become the fourth largest economy in 2026: report by the UK-based Centre for Economics and Business Research (CEBR).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X