For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று குருநானக் ஜெயந்தி... குருத்வாராவில் குவிந்த சீக்கியர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களால் இன்று குருநானக் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, டெல்லியில் உள்ள குருத்வாரா கோயில் (குருத்வாரா பங்களா சாகிப்), அமிர்தசரஸில் உள்ள தங்கக் கோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் குவிந்தனர்.

சீக்கிசத்தை தோற்றுவித்தவரான குருநானக், சீக்கிய மத குருக்களில் முதலாமானவராகக் கருதப்படுகிறார். இது ஒவ்வொரு ஆண்டும் பவுர்ணமியை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

India Celebrates Guru Nanak Jayanti Today

இவ்விழாவின் போது சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் குருத்வாராவில் தங்களது குடும்பத்தினரோடு சேர்ந்து பாடல்களை பாடி மகிழ்கின்றனர். அதன் பின்னர் சீக்கிய மதத்தினருக்கான கோடியை கையில் ஏந்தி ஊர்வலமாக செல்கின்றனர். அப்போது ஆண்கள் கைகளில் நீண்ட பட்டை தீட்டப்பட்ட வாள்களை சுழற்றி பல்வேறு சாகச நிகழ்சிகளை அரங்கேற்ருகின்றனர்.

ஊர்வலம் முடிந்த பிறகு குருவின் பெயரால் அங்குள்ள அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது.

English summary
India celebrates Guru Nanak Jayanti today, the most sacred festival observed by Sikhs worldwide
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X