For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2.5 கி.மீ பின்வாங்கியது சீன ராணுவம்.. கிழக்கு லடாக்கில் அதிரடி திருப்பம்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: இந்த வாரம் தொடங்கவுள்ள அடுத்த சுற்று ராணுவ பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, பதற்றத்தை குறைக்கும் வகையில், இந்தியா மற்றும் சீனா துருப்புக்கள் கிழக்கு லடாக்கின் பல இடங்களில் சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு பின் வாங்கியுள்ளன.

Recommended Video

    எல்லையில் 2.5 கி.மீ பின்வாங்கியது சீன ராணுவம்

    காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம், இந்திய எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே படைகளை குவித்து வைத்துள்ளது. சில இடங்களில் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி விட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இதையடுத்து, மோல்டோவில் உள்ள இந்திய பார்டர் பாயிண்ட் பகுதியில் கடந்த சனிக்கிழமை லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய தரப்புக்கு 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை தாங்கினார்.

    திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

    அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

    அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

    இந்த நிலையில், பேட்ரோலிங் பாயிண்ட் 14 (கால்வான் பகுதி), பேட்ரோலிங் பாயிண்ட் 15, மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் இரு படைகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ. செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

    பின்வாங்கிய சீன ராணுவம்

    பின்வாங்கிய சீன ராணுவம்

    அடுத்த சில நாட்களில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் மற்றும் ஜூன் 6 ம் தேதி நடைபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் காரணமாக, சீன ராணுவம் தனது படைகளை கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு, பிபி -15 மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகியவற்றிலிருந்து 2 முதல் 2.5 கிலோமீட்டர் பின்வாங்கியுள்ளது.

    இந்தியாவும் சமாதானம்

    இந்தியாவும் சமாதானம்

    சீனாவின் முன் முயற்சியால், இந்திய தரப்பும் தனது சில துருப்புக்களையும் வாகனங்களையும் இந்த பகுதிகளிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
    பட்டாலியன் தளபதி மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவர்கள் ஹாட்லைன் மூலம், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன என்று கூறுகிறது ஏ.என்.ஐ.

    கிழக்கு லடாக்கில் துவக்கம்

    கிழக்கு லடாக்கில் துவக்கம்

    இந்த பகுதிகளில் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன, சீன ராணுவ பின்வாங்கும் நடவடிக்கைகள் கிழக்கு லடாக்கிலும் இந்த இடத்திலிருந்து மட்டும் இப்போதைக்கு தொடங்கப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

    English summary
    Ahead of the next round of military talks scheduled to start this week, troops of India and China have disengaged on the ground at multiple locations in Eastern Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X