For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லடாக் மோதல்.. இந்தியா - சீனா இடையே எல்லையில் நடந்த பேச்சுவார்த்தை.. உடன்படிக்கை எட்டப்படவில்லை!

Google Oneindia Tamil News

லடாக்: இந்தியா - சீனா இடையே எல்லையில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த விதமான உடன்படிக்கையும் எட்டப்படவில்லை. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தியா சீனா இடையே கடந்த மே மாதத்தில் இருந்து லடாக்கில் மோதல் நிலவி வருகிறது. இந்த உரசலை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் இதுவரை கிட்டத்தட்ட 30 முறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது.

ஆனால் எந்த பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு காணப்படவில்லை. எல்லையில் அமைதியை கொண்டு வரும் வகையில் முழுமையான முடிவு எதிலும் எடுக்கப்படவில்லை. இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் சீனா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

மாஸ்டர் பிளான்.. உத்தரகாண்டில் வேகமாக நிலம் வாங்கிய இந்திய விமானப்படை..சீனாவிற்கு எதிராக செம வியூகம்மாஸ்டர் பிளான்.. உத்தரகாண்டில் வேகமாக நிலம் வாங்கிய இந்திய விமானப்படை..சீனாவிற்கு எதிராக செம வியூகம்

நேற்று முதல்நாள்

நேற்று முதல்நாள்

நேற்று முதல்நாள் லடாக் பிரச்சனை குறித்து இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 5 உடன்படிக்கைகள் கொண்ட ஒப்பந்தம் போடப்பட்டது.

தொடர் பதற்றம்

தொடர் பதற்றம்

ஆனால் இதன் பின்பும் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளும் எல்லையில் படைகளை வாபஸ் வாங்கவில்லை. இதையடுத்து நேற்று இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ, விமான மற்றும் கடற்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு நடத்தினார்கள். அஜித் தோவல் பிரதமர் மோடியை சந்தித்து எல்லை பிரச்சனை குறித்து விளக்கினார்.

என்ன நிலைமை

என்ன நிலைமை

எல்லையில் இன்னும் நிலைமை சரியாகாத நிலையில் லடாக்கில் உள்ள சுசூலில் பிரிகேட் ரேங்க் வீரர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடந்தது. இன்று பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. காலை 11 மணியில் இருந்து 3 மணி வரை இந்த ஆலோசனை நடந்தது. ஆனால் இதில் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

எப்போது படை

எப்போது படை

இதனால் விரைவில் இரண்டு நாடுகளின் கமாண்டர் லெவல் மீட்டிங் நடத்த வாய்ப்பு உள்ளது. எல்லையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பின் கமாண்டர் லெவல் மீட்டிங் நடக்கவில்லை. கடைசியாக லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் இடையே லடாக்கில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பெரிய அளவில் அமைதி உடன்படிக்கை எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இவர்கள் மீண்டும் சந்திக்க உள்ளனர்.

English summary
India China Standoff: Brigate level meet at Chushul in Ladakh ends without any decision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X