For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெஷலிஸ்ட் வந்துவிட்டார்.. சீன எல்லைக்கு Fire & Fury படையை அனுப்பும் இந்தியா.. நாளை என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

லடாக்: இந்தியா சீனா இடையே நாளை எல்லையில் நடக்கும் பேச்சுவார்த்தைக்காக இந்தியா முக்கியமான லெப்டினன்ட் ஜெனரல் ஒருவரை எல்லைக்கு அனுப்ப உள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் எல்லைக்கு செல்ல இருக்கிறார்.

Recommended Video

    லடாக் முழுவதும் இந்திய விமானப்படை தீவிர ரோந்து

    இந்தியா சீனா இடையிலான பிரச்சனை முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. இரண்டு நாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல்கள் இரண்டு நாட்டு பிரச்சனை தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

    லடாக் அருகே பாங்காங் திசோ பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இரண்டு நாட்டு சண்டை முடிவிற்கு வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    திருச்சி கொரோன வார்டில் இருந்து 6 பேர் டிஸ்சார்ஜ்.. இதுவரை 77 பேரை குணப்படுத்தி அசத்தல்திருச்சி கொரோன வார்டில் இருந்து 6 பேர் டிஸ்சார்ஜ்.. இதுவரை 77 பேரை குணப்படுத்தி அசத்தல்

    யார் செல்கிறார்

    யார் செல்கிறார்

    இந்த நிலையில் இந்தியா இந்த பேச்சுவார்த்தைக்காக முக்கியமான லெப்டினன்ட் ஜெனரல் ஒருவரை எல்லைக்கு அனுப்ப உள்ளது. இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் எல்லைக்கு சென்று சீனாவின் லெப்டினன்ட் ஜெனரல் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியாவை சேர்ந்த ராணுவ அதிகாரிகளில் அதிக அனுபவம் மற்றும் அதிகாரம் கொண்ட வீரர்களில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் முக்கியமான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிரடி மன்னன்

    அதிரடி மன்னன்

    லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் லடாக்கில் லேவில் இருக்கும் 14வது பாதுகாப்பு படை பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஆவார். இவரின் படை பிரிவின் பெயரே மிகவும் அதிரடியானது. நெருப்பு மற்றும் சீற்றம் என்று பொருள்படும் வகையில் இவரின் படைப்பிரிவுக்கு 'Fire and Fury Corps' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு வலிமை வாய்ந்த சக்தி மிகுந்த படையாகும் இது.

     எங்கு இருக்கிறது

    எங்கு இருக்கிறது

    உதம்பூர் பகுதியில் இந்த படைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மிக மோசமான சூழ்நிலையில், வானிலையில், மலைகளுக்கு இடையே தாக்குதல் நடத்தும் வகையில் இந்த குறிப்பிட்ட பிரிவு தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த படையின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்தான் சீனாவின் லெப்டினன்ட் ஜெனரல் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் உடன் 10 வீரர்கள் உடன் செல்ல இருக்கிறார்கள்.

    நிறைய பொறுப்பு

    நிறைய பொறுப்பு

    கடந்த வருடம் அக்டோபர் மாதம்தான் இந்த படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் பொறுப்பில் ஹரீந்தர் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறார். இவர் இதற்கு முன் ராணுவ புலனாய்வு குழுவின் இயக்குனர், பொது ராணுவ நடவடிக்கைகளின் இயக்குனர் மற்றும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்கள் கட்டுப்பாட்டு இயக்குனர் பொறுப்பில் இருந்துள்ளார்.

    ஆப்ரிக்கா சென்றவர்

    ஆப்ரிக்கா சென்றவர்

    ஐநாவின் மிஷன் ஒன்றுக்காக இவர் ஆப்பிரிக்காவிலும் பணியாற்றி இருக்கிறார். அதேபோல் ஜம்மு காஷ்மீரில் முக்கிய பொறுப்புகளை வகித்து இருக்கிறார். டெல்லி, சிங்கப்பூர் என்று பல இடங்களில் படித்த இவர், மிகவும் ஸ்டிரிக்ட் ஆபிசர் என்கிறார்கள். நாளை இவர் பேச்சுவார்த்தை நடத்துவதை பொறுத்துதான் இந்தியா - சீனா எல்லை பிரச்சனையில் தீர்வு ஏற்படும். இரண்டு நாடும் போர் செய்வதா அமைதியாக செல்வதா என்ற முடிவு இவரின் கையில்தான் இருக்கிறது.

    English summary
    India - China Standoff: India sending Fire and Fury Lt. Gen for a talk with Dragons tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X