For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சேவை வீழ்த்த உதவியது இந்திய 'ரா' அல்ல... 'வைபர்' தொலைபேசிதான்.. ரகசியத்தை உடைத்த சந்திரிகா

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே வீழ்த்த உதவியது இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா' அல்ல.. 'வைபர்' தொலைபேசிகள்தான் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

டெல்லி வருகை தந்த சந்திரிகா குமாரதுங்க செய்தியாளர்களிடம் கூறியதாவது:

India did not influence Rajapaksa's defeat: Chandrika

இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான ரா மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் சதியினாலேயே தாம் அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதாக மகிந்த ராஜபக்சே கூறிவருகிறார். இதில் எந்த ஒரு உண்மையுமே இல்லை.

மகிந்த ராஜபக்சே அகற்றுவதற்கு என்னை ஏன் மீண்டும் அரசியலுக்கு வரக் கூடாது என்று மட்டுமே ரா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் என்னை கேட்டிருந்தன. இதைத்தான் அவர்கள் செய்தனர்.

மகிந்த ராஜபக்சேவை தோற்கடிப்பதற்காக இந்தியாவி 'ரா' சேட்டிலைட் தொலைபேசிகளை வழங்கியதாக கூறப்படுவதில் உண்மை எதுவும் இல்லை.

நாங்கள் "வைபர்" தொலைபேசிகளை பயன்படுத்தினோம். வைபர் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பத்தை மகிந்த ராஜபக்சே அரசாங்கம் தெரிந்திருக்கவில்லை.

எங்கிருந்து யார் அழைக்கிறார் என்று சிலரால் அடையாளம் காண முடிந்தாலும் எந்தவொரு புலனாய்வு அமைப்பினாலும் வைபர் அழைப்புகளை ஒட்டுக்கேட்பது கடினமானது.

இலங்கையில் அந்த தொழில்நுட்பம் இருக்கவில்லை. இல்லாவிட்டால் நாங்கள் எல்லோரும் இறந்திருப்போம்.

இவ்வாறு சந்திரிகா குமாரதுங்க கூறினார்.

English summary
Former Sri Lankan President Chandrika Bandaranaike Kumaratunga denied that India had any role in her successor, Mahinda Rajapaksa's defeat at the presidential election in January.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X