For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சி.ஏ.ஏ.-ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்.. மத்திய அரசுக்கு பின்னடைவு?

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அரசுக்கு பின்னடைவு?| EU against CAA: India is facing a major diplomatic setback

    டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் நடவடிக்கைகள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    மத்தியில் பிரதமர் மோடி 2014-ல் பிரதமராக பதவி ஏற்ற போது முதலில் அண்டை நாடுகளுடன் நல்லுறவு என்ற கோட்பாட்டை வலியுறுத்தினார். இலங்கை, மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளில் இந்தியாவுக்கு ஆதரவான சூழ்நிலை உருவாக்கப்பட்டது. பூட்டானின் டோக்லாமை சீனா ஆக்கிரமிக்க முயன்றபோது இந்தியா உக்கிரமான எதிர்ப்பை தெரிவித்தது. அத்துடன் உலக நாடுகள் பலவற்றுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய போதும் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலையை பிரதமர் மோடி உருவாக்கி வைத்திருக்கிறார் என பெருமிதம் பேசப்பட்டது.

    India Faces diplomatic steback from EU on CAA?

    2019-ல் பிரதமர் மோடி 2-வது முறையாக பிரதமரானது முதல் பாஜக தமது இந்துத்துவா கொள்கைகளை படுதீவிரமாக செயல்படுத்த தொடங்கியது. இதில் முதலாவது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370-வது பிரிவை ரத்து செய்தது. அப்போது ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் கனத்த மவுனத்தை வெளிப்படுத்தியது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அவை ஒதுங்கிக் கொண்டன. இதனை மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மூலம் கிடைத்த வெற்றியாக பாஜக கொண்டாடியது. தங்களது வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக மத்திய அரசு மகிழ்ந்தது.

    தீவிரமாகும் சிஏஏ போராட்டம்.. அதிகரிக்கும் வெளிநாட்டு அழுத்தம்.. தவறான இடத்தில் கைவைத்துவிட்டதா அரசு?தீவிரமாகும் சிஏஏ போராட்டம்.. அதிகரிக்கும் வெளிநாட்டு அழுத்தம்.. தவறான இடத்தில் கைவைத்துவிட்டதா அரசு?

    இதன் அடுத்த கட்டமாக, குடியுரிமை சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மிக மிக கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மத்திய அரசு நிறைவேற்றியது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மதரீதியாக துன்புறுத்தப்பட்டு அகதிகளாக வரும் முஸ்லிம்கள் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது சி.ஏ.ஏ.. இப்படி முஸ்லிம்களை தனிமைப்படுத்துகிற இந்த சட்டம் மிகவும் ஆபத்தானது; இலங்கையில் வாழும் இந்துக்களான ஈழத் தமிழருக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட குரல்கள் வலுவாக எதிரொலித்து வருகின்றன. இதற்கான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் வன்முறைகள் வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட வழக்குகள் பாய்ந்துள்ளன.

    India Faces diplomatic steback from EU on CAA?

    இந்நிலையில்தான் சி.ஏ.ஏ.விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டு வருகின்றனர். இது சர்வதேச அரங்கில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் எந்த வித குற்றச்சாட்டுகள் இல்லாமலேயே 6 மாதங்களுக்கும் மேலாக முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை சிறையில் அடைத்தது மத்திய அரசு. இதற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இப்போதுதான் மெல்ல குரல்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற எம்.பி.க்கள் வரிந்து கட்டியுள்ளனர். இப்போது சர்வதேச அரங்கில் பெரும் பின்னடைவை மத்திய அரசு எதிர்கொண்டிருக்கிறது.

    English summary
    India is facing a major diplomatic setback from the European Unionparliament on Resolution agains CAA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X