For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காப்பான் பாணியில் வெட்டுக்கிளிகள் பயங்கரம்.. நிமிடத்தில் அழியும் பயிர்கள்.. அதிர்ச்சியில் விவசாயிகள்

Google Oneindia Tamil News

போபால்: பாகிஸ்தானை காலி செய்துவிட்டு இந்தியாவை வந்தடைந்துள்ளது வெட்டுக்கிளிகள். ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மற்றும் உத்திரபிரதேசத்தில் பயிர்களை நாசமாக்கி வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகளால் உணவு விநியோகத்தில் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெட்டுக்கிளிகளாலும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Recommended Video

    வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா?

    சில நிமிடங்களில் ஏக்கர் கணக்கிலான பயிர்களை அழிக்கும் வல்லமை கொண்டவை வெட்டுக்கிளிகள். ஒரே நேரத்தில் பல்லாயிரம் வெட்டுக்கிளிகள் அறுவடைக்கு தயாராக இருக்கும் பருத்தி, மிளகாய், கோதுமை உள்பட பல்வேறு பயிர்களை தாக்கும்.

     india faces locus attack: crops destroyed with in few hours

    இதனால் சில நிமிடத்தில் அந்த நிலத்தில் உள்ள பயிர்கள் மொத்தமாக காலியாகிவிடும். இதை தடுக்க பயிர்களை பயிரிடும் போதே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் சேதம் ஏற்பட்டு அழிந்துவிடும்.

    இந்த சூழலில் பாகிஸ்தானில் பல்லாயிரம் ஹெக்டேர் பயிர்களை காலி செய்த வெட்டுக்கிளிகள் அண்மையில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் புகுந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதன்பிறகு தற்போது ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் உத்தப்பிரதேசத்தின் ஜான்சி பகுதியில் பயிர்களை நாசம் செய்துவருகின்றன. இந்நிலையில் தற்போது விவசாயப் பயிர்களை உண்ணும் இந்த வெட்டுக்கிளிகள் மத்திய பிரதேசத்திற்குள்ளும் நுழைந்துள்ளன.

    26 ஆண்டுகளில் மிக மோசமான பயிர் தாக்குதல்.. லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் என்றால் என்ன?26 ஆண்டுகளில் மிக மோசமான பயிர் தாக்குதல்.. லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் என்றால் என்ன?

    மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்திற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் மால்வா நிமரின் பகுதிகளுக்குச் சென்று அழித்தன. அதன்பிறகு புத்னியின் செஹோரில் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் அங்கு சேதத்தை ஏற்படுத்தின. போபால் பகுதியில் சுற்றுகின்றன. இந்த வெட்டுக்கிளிகளால் வடமாநிலங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வெட்டுக்கிளிகளால் 27 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய மோசமான தாக்குதல் இப்போது நடந்துள்ளதாக கூறும் வல்லுநர்கள், நாட்டில் மிகப்பெரிய அளவில் உணவு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

    பாலைவன வெட்டுக்கிளிகள் என்று அழைக்கப்படும் இவற்றை கட்டுப்படுத்த டிரம்ஸ் போன்று உரத்த ஒலிகளைப் எழுப்ப வேண்டும்.. பாத்திரங்களை ஓங்கித் தட்டுதல், கூச்சலிடுதல் போன்றவற்றை செய்து விரட்ட முடியும் என்று வேளாண்துறை ஆலோசனை வழங்கி உள்ளது. மேலும் வெட்டுக்கிளிகளின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும் என்றும், டிராக்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் இரசாயன ஸ்ப்ரேயர்களைப் பயன்படுத்தி வெட்டுக்கிளிகள் உணவு தானியத்தை அழிப்பதை தடுக்க முடியும் என்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.

    English summary
    gujarat and rajasthan , punjab, madya pradesh, uttar locust attack, crops destroyed with in few hours. 10000 hectares of farmland in the worst affect
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X