• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூப்பர் மேட்ச்: இந்திய வெற்றியில் ஒரு லாரி லோடு மண்ணைக் கொட்டி நியூசிலாந்தை காத்த 2 இந்தியர்கள்

Google Oneindia Tamil News

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தோவி முனையில் 5 விக்கெட்டுகளை இழந்து போராடிய இந்தியா பின்னர் சுதாரித்து விளையாடி நியூசிலாந்துக்கு இமாலய இலக்கை வைக்க நியூசிலாந்து சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்கிற நிலையில் போராடி ஆட்டத்தை டிரா செய்துள்ளது நியூசிலாந்து.

 ஜூலியின் தில்.. அதிகாலையில் பிரசவ வலி.. சைக்கிளை ஓட்டிக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு சென்று.. சபாஷ் எம்பி ஜூலியின் தில்.. அதிகாலையில் பிரசவ வலி.. சைக்கிளை ஓட்டிக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு சென்று.. சபாஷ் எம்பி

முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாமல் களம் இறங்கிய அணிகள்

முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாமல் களம் இறங்கிய அணிகள்

இந்தியா நியூசிலாந்து டி 20 போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்தியா அதே சூட்டுடன் டெஸ்ட் போட்டிக்கு வந்தது. டெஸ்ட் போட்டியில் முதல் ஆட்டத்திலிருந்து கோலிக்கு ஓய்வு கொடுக்க ரஹானே கேப்டனானார். ரோஹித் இல்லை, கோலி இல்லை, கே.எல்.ராகுல் இல்லை, பும்ரா இல்லை, ஷமி இல்லை என முக்கிய ப்ளேயர்கள் இல்லாமல் இந்திய ஏ அணி போல் இறங்கியது இந்தியா.

நியூசிலாந்து தரப்பிலும் போல்ட், கப்தில் இருவரும் இல்லாத நிலையில் 3 ஸ்பின்னர்களுடன் இறங்கியது நியூசிலாந்து. அந்த மூவரும் தான் நியூசிலாந்தை தோல்வியிலிருந்து காத்துள்ளனர். இரண்டு ஸ்பின் பவுலர்களின் ஆட்டம் இந்தியாவால் கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாத நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

முதலில் இன்னிங்க்ஸில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களை எடுத்தது. அறிமுக ஆட்டக்காரர் ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்தார், கில் 50 ரன்களுக்கும், ஜடேஜா 52 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி 296 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. அறிமுக ஆட்டக்காரர் யங் மிகவும் சோதித்தார், முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது.

3 வது நாள் ஆட்டம்

3 வது நாள் ஆட்டம்

3-வது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் சேர்த்திருந்த இந்தியா மறுநாள் சடசடவென து. மயங்க் அகர்வால் 4 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜரா 22 ரன்களில் ஜேமிஸன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ரஹானே களமிறங்கினார். 40 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்தியா

தடுமாறிய இந்தியா கைகொடுத்த ஸ்ரேயஸ், அஸ்வின், சாஹா

தடுமாறிய இந்தியா கைகொடுத்த ஸ்ரேயஸ், அஸ்வின், சாஹா

இதனால் 150 ரன்களைக்கூட இந்தியா தாண்டாது, எளிதாக நியூசிலாந்து வெல்லப்போகிறது என்கிற எண்ணத்தை ஸ்ரேயஸ் ஐயரும் அஸ்வினும் உடைத்தனர், அஸ்வின் அவுட்டாக அடுத்து வந்த சாஹா இணைந்து ஸ்கோரை உயர்த்தினார். 234 க்கு டிக்ளேர் செய்து 284 ரன்களை டார்கெட்டாக நியூசிலாத்துக்கு கொடுத்தது இந்தியா. பிட்ச் கிட்டதட்ட செத்துப்போன நிலையில் பால்கள் எழும்பாத நிலையில் ஸ்பின்னர்களை நம்பி டிக்ளேர் செய்தது இந்தியா. 4 ஆம் நாள் ஆட்டத்தில் தவறான கணக்கீட்டில் எல்பிடபில்யூவை ரிவ்யூ தாமதமாக கேட்டதால் நாட் அவுட் ஆகியும் வெளியேறினார் யங்.

பொறுமையை சோதித்த வில்லியம்

பொறுமையை சோதித்த வில்லியம்

அதன் பின்னர் நைட் வாட்ச்மேனாக வந்த வில்லியம் சோமர்வில்லெ மறுநாள் மதியம் வரை அவுட் ஆகாமல் இந்திய அணியின் பொறுமையைச் சோதித்தார். சரிதான் மேட்ச் டிராவாகத்தான் முடியும் என்று நினைத்த நேரத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை அஷ்வின், ஜடேஜா உள்ளிட்டோர் வீழ்த்தி நம்பிக்கை அளிக்க ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டனர். சௌதி ஆடும் வரை நியூசிலாந்துக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் போன பின்னர் 2 பேர் புதிய ஆட்டக்காரர்கள் நின்றனர்.

ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி கையில் 7 ஓவர்கள் இருமுனைகளிலும் புதிய ஆட்டக்காரர்கள் அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரா என்கிற 2 ஸ்பின்னர்கள் தான் எளிதாக விக்கெட்டை வீழ்த்திவிடலாம் என்று ஒரு முனையில் அஸ்வினும் மறுமுனையில் ஜடேஜாவும் மாறி மாறி போட ரச்சின் ரவீந்திரா மிக அழகாக அவர்களை எதிர்க்கொண்டு பொறுமையைச் சோதித்தார்.

கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி

கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி

மறுமுனையில் அஜாஸ் பட்டேலும் அழகாக ஆட இந்திய அணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இடையிடையே லைட்டிங் குறைய கடைசி 4 ஓவர்களையும் அம்பையர்கள் சோதித்தபின்னரே அனுமதித்தனர். கடைசிவரை இந்திய அணியால் இருவர் விக்கெட்டையும் தூக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் 9 ஃபீல்டர்கள் அவர்களைச் சுற்றி நின்றனர். ஆனாலும் அவர்கள் அசராமல் நின்று வெளியாடினர். இதில் நகைச்சுவை என்னவென்றால் இந்தியா நியூசிலாந்து ஆட்டம் என்றாலும் மைதானத்தில் போலீங் போட்டது, பீல்டிங் செய்தது, பேட்டிங் செய்தது, அம்பையர்கள் அனைவரும் இந்தியர்களே.

நியூசிலாந்தை காத்து இந்தியாவை கடுப்பேற்றிய 2 இந்தியர்கள்

நியூசிலாந்தை காத்து இந்தியாவை கடுப்பேற்றிய 2 இந்தியர்கள்

நியூசிலாந்து தோல்வியடையாமல் இருக்க நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக கடைசியாக வந்த 2 இந்தியர்கள் மனம் தளராமல் நின்று நியூசிலாந்தை தோல்வியில் இருந்து காத்தனர். அந்த வகையில் நியூசிலாந்தை காத்ததும் 2 இந்தியர்களே. 3 ஸ்பின் பவுலர்களின் நிதான ஆட்டம் இந்தியாவை வெற்றிப்பெற விடாமல் தடுத்து விட்டது எனலாம்.

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி

மொத்தத்தில் டெஸ்ட் மேட்சாக இல்லாமல் 20/20 போட்டி போல் விறுவிறுப்பாக இன்றைய ஆட்டம் இருந்தது. 9 விக்கெட்டுகள் இழந்த நிலையில் கடைசிவரை விக்கெட் விழாமல் ரச்சின் ரவீந்திராவும், அஜாச் படேலும் நிலைத்து ஆடி இந்திய அணியின் வெற்றியில் ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுள்ளனர் இந்த இரண்டு நியூசிலாந்துவாழ் இந்தியர்கள். வரலாற்றில் சிறப்பான ஆட்டத்தில் ஒன்றாக இது இருக்கும்.

English summary
India fighting is useless: those 2 Indians who saved New Zealand,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X