For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எத்தனையோ ஹோட்டலுக்கு போயிருப்பீங்க, நீருக்கு அடியில் இருக்கும் பொசைடானுக்கு போனீங்களா?

By Siva
Google Oneindia Tamil News

அகமதாபாத்: இந்தியாவில் முதல் முதலாக குஜராத் மாநிலத்தில் நீருக்கு அடியில் இயங்கும் உணவகம் துவங்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் பரத் பட். அவர் அகமதாபாத்தில் நீருக்கு அடியில் இயங்கும் உணவகத்தை துவங்கியுள்ளார். தரையில் இருந்து 20 அடி ஆழத்தில் செயல்படும் உணவகத்தில் 32 இருக்கைகள் உள்ளது.

பெரிய டியூப் வடிவில் இருக்கும் உணவகத்தை சுற்றியுள்ள கண்ணாடிக் குழாயில் 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டம் நீர் ஊற்றி அதில் 4 ஆயிரம் வகை மீன்கள் விடப்பட்டுள்ளது. மீன்கள் அழகாக நீந்திக் கொண்டிருப்பதை பார்த்து ரசித்தபடியே உணவு சாப்பிடலாம்.

சைவ உணவகமான அதற்கு பொசைடான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தாய், மெக்சிகன் மற்றும் இந்திய வகை உணவுகள் பரிமாறப்படுகிறது.

பொசைடான் உணவகம் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

English summary
India has got its first underwater restaurant in Ahmedabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X