For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, காங். தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    வாஜ்பாயின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

    டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டுகளில், கூறியுள்ளதாவது: அன்பார்ந்த அட்டல்ஜி மறைவால் இந்தியாவே துக்கத்தில் உள்ளது. வாஜ்பாயின் போராட்டங்களால்தான் பாஜக எனும் கட்டிடம் செங்கல் செங்கலாக வைத்து அடுக்கி உருவாக்கப்பட்டது. பாஜகவின் செய்தியை பரப்ப அவர் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் பயணித்தார். பல மாநிலங்களிலும் பாஜக வளர வாஜ்பாய் முயற்சிகளே காரணம்.

    India grieves the demise of our beloved Atal Ji, says Narendra Modi

    அடல்ஜி மறைவு, தனிப்பட்ட முறையிலும் எனக்கு பெரிய இழப்பாகும். ஏகப்பட்ட நினைவுகள் எனக்கு அவரோடு உள்ளன. பாஜகவில் என்னை போன்ற பல தொண்டர்களுக்கு அவர்தான் ஊக்க சக்தியாக இருந்தார். 21வது நூற்றாண்டில் இந்தியா, வளர்ச்சியும், வலிமையும் அடைய அடித்தளம் போட்டது வாஜ்பாய்தான். வாஜ்பாய் உருவாக்கிய திட்டங்கள் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் ஏதாவது ஒரு வைகையில் தொட்டிருக்கும்.

    ஒரு சகாப்தம் இப்போது மறைந்துவிட்டது. தேசத்துக்காக வாழ்ந்தவர் வாஜ்பாய். அவரின் குடும்பத்தார், பாஜக தொண்டர்கள், அவர் மீது ஈர்ப்பு கொண்ட லட்சக்கணக்கானோருடனும் எனது நினைவுகள் உள்ளன. ஓம் சாந்தி. இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், இன்று இந்தியா ஒரு சிறந்த மகனை இழந்துவிட்டது. பல லட்சம் பேரின் அன்புக்கும், மரியாதைக்கும் உரியவர் அடல் பிகாரி வாஜ்பாய். அன்னாரின் குடும்பத்தாருக்கும், அவரை விரும்புவோருக்கும் எனது இரங்கல்கள். அவரை மிஸ் செய்யப்போகிறோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அளித்த பேட்டியில், நாடு கண்ட உயர்ந்த தலைவர் வாஜ்பாய். அவரது மறைவால் நாடு பேரிழப்பை சந்தித்துள்ளது. அனைத்து சிறந்த குணங்களும் உள்ளடக்கியவர் வாஜ்பாய். எனது ஆழ்ந்த இரங்கல்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

    English summary
    India grieves the demise of our beloved Atal Ji. His passing away marks the end of an era. He lived for the nation and served it assiduously for decades. My thoughts are with his family, BJP Karyakartas and millions of admirers in this hour of sadness. Om Shanti, Says Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X