For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிறுத்தியது இந்தியா.. நேபாளத்தில் நிலநடுக்க மீட்புப் பணிகளை!

Google Oneindia Tamil News

டெல்லி: நேபாளத்தில் செய்து வந்த மீட்புப் பணிகளை இந்தியா நிறுத்தி விட்டது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இறங்கின. பல்வேறு குழுக்களாக இந்தப் பணிகளில் இந்த நாடுகள் ஈடுபட்டிருந்தன.

India halts earth quake relief works in Nepal

கிட்டத்தட்ட திடீரென மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுக் குழுக்களை பணிகளை நிறுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு நேபாளம் கேட்டுக் கொண்டது. அதை நிறுத்தினால்தான் தங்களால் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று அது கூறியது. இதையடுத்து ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் பணிகளை நிறுத்தி விட்டு கிளம்பிச் சென்றனர்.

இந்த நிலையில் இந்தியக் குழுவினரும் பணிகளை தற்போது நிறுத்தி விட்டனர். அனைவரும் காத்மாண்டுவில் குழுமியுள்ளனர். அனைவரும் நாடு திரும்பக் காத்துள்ளனர்.இந்தக் குழுவினரில் 3 குழுவினர் பாட்னாவுக்கு சாலை மார்க்கமாக வருவார்கள் என்றும், மற்றவர்கள் விமானம் மூலம் திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி வெளிநாட்டினரை நேபாளம் திருப்பி அனுப்பியதன் பின்னணியில் சீனா இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும் நேபாள அரசு இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

English summary
India has halted its earth quake relief works in Nepal and getting ready to leave the Himalayan country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X