For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிகிரி படிச்சவங்களாம் இருக்காங்க பாஸ்... இந்தியாவில் இத்தனை படித்த பிச்சைக்காரர்களா? -ரிப்போர்ட்

இந்தியாவில் எத்தனை பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் படித்தவர்கள் என்ற விவரம் சென்செக்ஸ் கணக்கின் மூலம் வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் எத்தனை பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் படித்தவர்கள் என்ற விவரம் சென்செக்ஸ் கணக்கின் மூலம் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் சகஜமாக எல்லோரும் பார்க்க கூடியது சாலையோர பிச்சைக்காரர்களைத்தான். ஜாதி, மதம், மொழி என்று பிரிந்து இருந்தாலும், எல்லா மாநிலத்திலும் பிச்சைக்காரர்கள் காணக்கிடைப்பார்கள்.

பிச்சைக்காரன் படத்தில் வரும் பிச்சைக்காரர்கள் படித்துவிட்டு ஆங்கிலம் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும், அது முழுக்க முழுக்க உண்மை என்று 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய சென்செக்ஸ் கணக்கு நிரூபித்து இருக்கிறது. ஆம், இந்தியாவில் அந்த அளவிற்கு படித்த பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்.

மொத்தம் எத்தனை பிச்சைக்காரர்கள்

மொத்தம் எத்தனை பிச்சைக்காரர்கள்

இந்தியாவில் மொத்தம் 4.13 லட்சம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இது கடந்த பத்து ஆண்டுகளை விட அதிகம் என்று சென்செக்ஸ் கணக்கு தெரிவிக்கிறது. இது இன்னும் சில வருடங்களில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. நாளுக்கு நாள் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று சென்செக்ஸ் கணக்கு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அதிகம்

மேற்கு வங்கத்தில் அதிகம்

இந்தியாவில் மேற்குவங்கத்தில்தான் அதிக பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் 81,244 பிச்சைக்காரர்கள் மேற்கு வங்கத்தில் மட்டும் இருக்கிறார்கள். அடுத்தபடியாக 65,835 பிச்சைக்காரர்கள் உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறார்கள். பிச்சை எடுப்பது தடை செய்யப்பட ஹைதராபாத்தில் 30,218 பேர் பிச்சை எடுக்கிறார்கள். பீகாரில் அடுத்தபடியாக 29,723 பேர் பிச்சை எடுக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் 28,695 பேர் பிச்சை எடுக்கிறார்கள்.

குறைவு எங்கே

குறைவு எங்கே

இந்தியாவில் தமிழகம், கேரளா, டெல்லி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில்தான் குறைவான பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அந்தமான், நிகோபார் தீவுகளில் மொத்தம் 56 பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இதுதான் இந்தியாவில் குறைவு. டெல்லியில் 2,187 பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்.

உண்மையான பிச்சைக்காரர்கள்

உண்மையான பிச்சைக்காரர்கள்

இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களில் மொத்தம் 3.72 லட்சம் பேர்தான் இதை நிரந்தர வேலையாக பார்க்கிறார்கள். மற்றவர்கள் பார்ட் டைம் பணியாக பிச்சை எடுப்பதை செய்கிறார்கள். அதாவது, 41,400 பேர் வேறு சில பணிகளை பார்த்துக் கொண்டு, அவ்வப்போது வந்து பிச்சையும் எடுக்கிறார்கள்.

ஆண்கள் பெண்கள் எத்தனை

ஆண்கள் பெண்கள் எத்தனை

இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களில் மொத்தம் 2.2 லட்சம் பேர் ஆண்கள். 1.91 லட்சம் பேர் பெண்கள். இதில் பெண்கள்தான் அதிக அளவில் பார்ட் டைம் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். அதேபோல் திருமணம் ஆன குழந்தைகளை கொண்டு இருக்கும் பெண்கள்தான் அதிக பிச்சை எடுக்கிறார்கள்.

எத்தனை பேர் படித்தவர்கள்

எத்தனை பேர் படித்தவர்கள்

இந்தியாவில் உள்ள 4.13 லட்சம் பிச்சைக்காரர்களில் 280840 பிச்சைக்காரர்கள் படிக்காதவர்கள். இவர்கள் பள்ளிக்கு கூட செல்லவில்லை. இதில் 132160 பேர் படித்தவர்கள். அதாவது இந்தியாவில் மொத்தம் 32 சதவிகிதம் பிச்சைக்காரர்கள் படித்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

விகிதம் என்ன

விகிதம் என்ன

இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்களில் மொத்தம் 18079 பேர் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள். 528 பேர் முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். 5286 பேர் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள். இவர்கள் எல்லோரும் வெவ்வேறு படிப்புகளை படித்து இருக்கிறார்கள் என்று சென்செக்சில் அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல் வெளியாகி உள்ளது.

English summary
India has 32% of literate beggars says 2015 census report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X