For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தற்கொலை: உலகில் இந்தியா 'பர்ஸ்ட்', தேசிய அளவில் கேரளா 'பர்ஸ்ட்'

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே இந்தியாவில் தான் தற்கொலை சம்பவங்கள் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமும் செய்தித்தாளை பார்த்தால் தற்கொலை செய்தி தவறாமல் வருகிறது. அப்பா திட்டினால் தற்கொலை, நிதி பிரச்சனை என்றால் தற்கொலை என்று எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் தற்கொலை பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியா

இந்தியா

உலகிலேயே இந்தியாவில் தான் தற்கொலை சம்பவங்கள் அதிகம். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்துக்கு இணையாக இந்தியாவில் தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன.

தற்கொலை

தற்கொலை

விவசாயிகளை விட விவசாயம் அல்லாத தொழில் செய்பவர்கள் தான் இந்தியாவில் அதிகம் தற்கொலை செய்துள்ளனர்.

கேரளா

கேரளா

இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிகம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.

தமிழகம்

தமிழகம்

கேரளாவில் லட்சத்தில் 25.63 சதவீதம் பேரும், தமிழகத்தில் 22.33 சதவீதம் பேரும், கர்நாடகாவில் 17.91 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆந்திரா

ஆந்திரா

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் லட்சத்தில் 16.89 சதவீதம் பேரும், கோவாவில் 22.12 சதவீதம் பேரும், திரிபுராவில் 25.43 சதவீதம் பேரும், சத்தீஸ்கரில் 17.54 சதவீதம் பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

பீகார்

பீகார்

நாட்டிலேயே பீகாரில் தான் குறைவான நபர்கள் தற்கொலை செய்துள்ளனர். பீகாரில் லட்சத்தில் 0.97 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் லட்சத்தில் 2.55 சதவீதம் பேரும், டெல்லியில் 11.79 சதவீதம் பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

English summary
According to WHO statement, India has the highest number of suicide cases in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X