For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“உவ்வே” எடுக்க வைக்கும் குடிநீர் பட்டியலில் இந்தியா முதலிடம்- தண்ணீர் தினத்தில் “ஷாக்” ஆய்வு!

Google Oneindia Tamil News

டெல்லி: லண்டனின் தன்னார்வ அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் உலகில் பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்த வரிசையில் அடுத்த இரண்டு இடங்களை முறையே சீனாவும், நைஜீரியாவும் பிடித்துள்ளன.

உலகில் ஆண்டுதோறும் உலக தண்ணீர் தினம் மார்ச் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது நேற்று தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.

சுத்தமான குடிநீர் ஆய்வு:

சுத்தமான குடிநீர் ஆய்வு:

அதன்படி இந்த ஆண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி லண்டனில் உள்ள தன்னார்வ நிறுவனமான வாட்டர் எய்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு கிடைக்கப்படும் சுத்தமான குடிநீர் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது.

முதலிடத்தில் இந்தியா:

முதலிடத்தில் இந்தியா:

அந்த அறிக்கையில், "உலகிலேயே அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது.

குழந்தைகளின் இறப்பு:

குழந்தைகளின் இறப்பு:

இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதம் பேருக்கு அதாவது 7.6 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. தண்ணீர் பிரச்னையால் உண்டாகக்கூடிய வயிற்றுப்போக்கின் காரணமாக ஆண்டுதோறும் 1.4 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.

ஒரு லிட்டர் குடிநீருக்கு செலவு:

ஒரு லிட்டர் குடிநீருக்கு செலவு:

இந்தியாவில் பாதுகாப்பட்ட குடிநீரை குடிக்கும் மக்கள் சுத்தமான குடிநீரை வியாபாரியிடமிருந்து பெற ஒரு லிட்டர் குடிநீருக்கு 1 ரூபாய் செலவிட வேண்டியது வரும்.

நீர்வள பரமாரிப்பு இல்லை:

நீர்வள பரமாரிப்பு இல்லை:

தண்ணீர் பற்றாக்குறையை பொறுத்து சில நேரங்களில் இத்தொகை இரட்டிப்பாகும். நீர் வளங்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால் தான் இந்திய மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் 10ல் பாகிஸ்தான்:

டாப் 10ல் பாகிஸ்தான்:

இப்பட்டியலில் டாப் 3ல், இந்தியாவுக்கு அடுத்த இடங்களில் சீனாவும், நைஜீரியாவும் உள்ளன. இந்த லிஸ்ட்டில்பாகிஸ்தான் 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A report says India has the world's highest number of people without access to clean water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X