For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2018-ல் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை நடத்துகிறது இந்தியா

By Mathi
Google Oneindia Tamil News

India to host 2018 men's hockey World Cup
டெல்லி: 2018-ம் ஆண்டுக்கான 14 வது உலக கோப்பை ஹாக்கி போட்டியை இந்தியா நடத்த சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை நடத்த உரிமம் கேட்டு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. இதில் ஆண்கள் உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு ஹாக்கி இந்தியா அனுமதி கோரி இருந்தது.

இந்த நிலையில் பல்வேறு நாடுகளின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த சர்வதேச ஹாக்கி சம்மேளனம் 2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் நாடுகளை அறிவித்துள்ளது.

இதன்படி உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.

உலக கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி இங்கிலாந்தில் ஜூலை 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12-ல் இருந்து 16 ஆக உயத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

English summary
India has been awarded the 2018 men's hockey World Cup, the second time in a span of eight years the country will be hosting the mega event having successfully organised the previous edition three years ago,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X