For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் 6-வது மிகப்பெரிய உற்பத்தி நாடு இந்தியா - மோடி பெருமிதம்

கடந்த இரண்டரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் பல புதிய உச்சங்களை தொட்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

காந்திநகர்: சர்வதேச அளவில் உலகின் 6வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா முன்னேறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் வைப்ரண்ட் குஜராத் (எழுச்சிமிகு குஜராத்) என்ற பெயரில் ஆண்டுதோறும் தொழில் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான மாநாடு காந்தி நகரில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 india is 6th largest manufacturing country in the world-modi

மாநாட்டில் பேசிய மோடி, ஜனநாயகம் என்பது எதிர்பார்த்த வளர்ச்சியை தராது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், இந்தியாவின் வளர்ச்சி முழுவதுமே ஜனநாயகத்தின் மீது கட்டமைக்கப்பட்டதுதான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியா என்ற நாட்டின் பலமே, மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகும். கடந்த இரண்டரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் பல புதிய உச்சங்களை தொட்டுள்ளது.

சர்வதேச ஆலை உற்பத்தி நாடுகள் பட்டியலில், உலகின் 6வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. ஊழலற்ற, நேர்மையான வளர்ச்சியுடன் கூடிய ஆட்சி நடத்துவதே பாஜக.,வின் இலக்கு என மோடி குறிப்பிட்டார்.

English summary
We have become 6th largest manufacturing country in the world: PM Narendra Modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X