For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுதந்திரதினவிழாவில் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறிய மோடி

சுதந்திரதினவிழாவில் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, பாதுகாப்பை மீறி பள்ளி குழந்தைகளிடம் சென்று பேசினார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியபின்னர் பிரதமர் மோடி, தனது காரில் இருந்து இறங்கி மாணவர்களிடம் சென்று பேசினார்.

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பின்னர் பேசிய மோடி, கிருஷ்ண ஜெயந்தியும், சுதந்திர தினமும் ஒரே சமயத்தில் கொண்டாடுகிறோம் என்றார்.

India is about Shanti, Ekta and Sadbhavana says Modi

மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும். இந்த போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது.

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நாம் தனியாக இல்லை, நமக்கு ஆதரவு கரம் நீட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன. ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

உரையை முடிக்கும் முன்பாக 'ஜெய் ஹிந்த்', 'வந்தே மாதரம்', 'பாரத் மாதா கி ஜெய்' என்று கூறியதும் கூட்டத்தினரும் பின்னாலேயே உற்சாகமாக குரல் எழுப்பினர்.

மோடி தனது உரையை முடித்துக்கொண்டு காரில் கிளம்பினார், அவரது கான்வாய் பின்தொடர்ந்தது. திடீரென்று என்ன நினைத்தாரோ பள்ளி குழந்தைகள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே காரை நிறுத்தச் சொன்னார்.

பிரதமர் மோடியின் வாகனம் நின்ற உடனேயே மாணவர்கள் உற்சாக குரல் எழுப்பினர். காரை விட்டு இறங்கிய மோடி, தனது பாதுகாவலர்களின் பாதுகாப்பையும் மீறி மாணவர்கள் கூட்டத்திற்குள் புகுந்தார்.

மாணவ, மாணவிகளின் உற்சாகத்திற்கிடையே பலருக்கும் கை கொடுத்தார் மோடி. கூட்டம் அதிகாரிக்கவே, உள்ளே புகுந்த பாதுகாவலர்கள், மாணவர்களை கட்டுப்படுத்தினர்.

English summary
PM Modi ahis Independence Day address at Red Fort. He said,India is about Shanti, Ekta and Sadbhavana. Casteism and communalism will not help us. He concludes, 'Jai Hind', 'Vande Mataram', 'Bharat Mata ki jai'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X