For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லை அருகே பதற்றம்.. பாக், சீனா போர் விமான ஒத்திகை.. போர் தொடுக்கும் அபாயம்? தயார் நிலையில் இந்தியா

Google Oneindia Tamil News

Recommended Video

    இம்ரான் கான் எச்சரித்த அடுத்த நாளே பாகிஸ்தான் அட்டகாசம்

    லடாக்: இந்திய எல்லை அருகே பாகிஸ்தானும், சீனாவும் தங்கள் போர் விமானங்களை ஒத்திகை பார்த்து வருவதால் எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என்பதால் இந்தியா தயார் நிலையில் கூர்ந்து கவனித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 2-ஆக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இந்த நிலையில் காஷ்மீரில் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் பறிபோய்விடும் என இரு நாடுகளும் அலறுகின்றன.

    காஷ்மீர் கலவரத்திற்கு பாகிஸ்தான்தான் காரணம்.. ராகுல் காந்தி திடீர் டிவிட்.. என்ன நடக்கிறது?காஷ்மீர் கலவரத்திற்கு பாகிஸ்தான்தான் காரணம்.. ராகுல் காந்தி திடீர் டிவிட்.. என்ன நடக்கிறது?

    மூன்றாவது நாடு

    மூன்றாவது நாடு

    இதனால் உலக நாடுகள் முதல் ஐநா சபை வரை சென்று இருநாடுகளும் ஆதரவு திரட்ட முயன்றன. ஆனால் எந்த நாடும் இவர்களுக்கு ஆதரவாக இல்லை. மாறாக காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வு காண வேண்டும். இதில் மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை என்றே தெரிவித்து விட்டன.

    பழித்தீர்க்க

    பழித்தீர்க்க

    எனினும் இந்தியாவை எப்படியாவது பழித் தீர்க்க வேண்டும் என்று இரு நாடுகளும் கங்கனம் கட்டிக் கொண்டுள்ளன. இதன் எதிரொலியாக காஷ்மீர் விவகாரத்தை லேசில் விட மாட்டோம். போர் தொடுக்கவும் தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறைக்கூவல் விடுத்தார்.

    போர் ஒத்திகை

    போர் ஒத்திகை

    இந்த நிலையில் சீனாவின் ஜெ 10 மற்றும் பாகிஸ்தானின் ஜேஎஃப் 17எஸ் விமானங்கள் லே பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் வடக்கே உள்ள ஹோட்டன் நகர வானில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. அது போல் பாகிஸ்தானின் ஜேஎஃப்17 ரக விமானங்கள் பல்டிஸ்தான் பகுதியில் ஸ்கார்டு விமான தளம் வழியாக போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன.

    தயார் நிலையில்

    தயார் நிலையில்

    இரு நாடுகளையும் இந்தியா கூர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தியாவும் தயார் நிலையில் உள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சீன விமான படையுடன் இணைந்து பாகிஸ்தான் நீண்ட காலத்துக்கு பிறகு விமான தளத்தை பயன்படுத்தியுள்ளது.

    English summary
    China and Pakistan are making aerial exercise near border. India is closely watching these activities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X