For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை தாக்குதல் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தால் இந்தியாவால் தடுக்க முடியாதாம்!

மும்பையில் தாக்குதல் நடத்தியது போல மீண்டும் தாக்குதல் நடந்தால் அதை இந்தியாவால் தடுக்க முடியாது என சர்வதேச விவகாரங்களுக்கான நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மீண்டும் மும்பை சம்பவம் போல ஒரு தாக்குதலை பாகிஸ்தான் நடத்தினால் அதை இந்தியாவால் தடுக்க முடியாது என பிரஸ்ஸல்ஸைச் சேர்ந்த சர்வதேச விவகாரங்களுக்கான நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் 11 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு உலகையே அதிரச் செய்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பு மூலம் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதலில், 106 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். 308 பேர் பலத்த காயமடடைந்தனர்.

India may have another attack like Mumbai 2008 attack

இந்த கொடூரத் தாக்குதலைப் போல ஒரு தாக்குதலை மீண்டும் பாகிஸ்தான் நடத்தினால், இந்தியாவால் அதை தடுக்க முடியாது என பிரஸ்ஸல்ஸைச் சேர்ந்த சர்வதேச விவகாரங்களுக்கான நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா மீது நடத்தப்பட்ட காஷ்மீர் 'யூரி' தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம். லக்‌ஷர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் இந்தியா மீதும் அமெரிக்கா மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது..

அதேபோல், பாகிஸ்தான் அரசின் ஆசீர்வாதம் இல்லாமல் அமெரிக்கா அல்லது ஆப்கான் அரசுடன் ஆப்கான் தலிபான்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அதை பாகிஸ்தான் சகித்துக் கொண்டிருக்காது எனவும் பிரஸ்ஸல்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

English summary
Brussels based research institute told in its report that India may have an attack during 2008 and India cann't stop it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X