For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூட்டான் உட்பட பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க இந்தியா முயற்சிக்கவில்லை: நிதின் கட்காரி

Google Oneindia Tamil News

நாக்பூர்: பூட்டான் உள்ளிட்ட எந்த ஒரு நாட்டின் ஒரு அங்குலத்தைக் கூட ஆக்கிரமிக்க இந்தியா முயற்சித்ததே இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா பாஜக தொண்டர்களிடையே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நிதின் கட்காரி பேசியதாவது:

India never tried to encroach Bhutan, says Nitin Gadkari

இந்தியாவுக்குள் சீனா ஊடுருவ முயற்சித்தது. ஆனால் இதற்கான பதிலடியை இந்தியா கொடுத்திருக்கிறது. இந்தியா ஆக்கிரமிப்பு சக்தி கிடையாது. ஆனால் இந்திய நிலத்தை ஆக்கிரமித்தால் பதிலடி கிடைக்கும்.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் என்ற தனி தேசத்தை உருவாக்கியது இந்தியா. அதற்காக வங்கதேசத்தை இந்தியா ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தியாவின் அண்டை நாடுகளில் பூட்டான் மிகச் சிறியது. ஆனால் ஒருபோதும் பிற நாடுகளில் ஒரு அங்குலத்தைக் கூட இந்தியா ஆக்கிரமிக்க நினைத்தது இல்லை. முயற்சித்ததும் இல்லை.

எல்லையில் பூட்டானும் சேட்டையா? அஸ்ஸாமுக்கான பாசன நீரை நிறுத்தியதா? எல்லையில் பூட்டானும் சேட்டையா? அஸ்ஸாமுக்கான பாசன நீரை நிறுத்தியதா?

இந்தியாவைப் பொறுத்தவரையில் நாடுகளிடையே நட்புறவையே விரும்புகிறது. இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.

English summary
Union Minister of Road Transport and Highways Nitin Gadkari said that India never tried to take a single square foot of land even from a small country like Bhutan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X