For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செஷல்ஸ் நாட்டுக்கு டார்னியர் விமானத்தை பரிசளிக்கும் இந்தியா.. ஏன் தெரியுமா?

இந்தியா செஷல்ஸ் நாட்டுக்கு டார்னியர் விமானம் ஒன்றை பரிசளிக்க திட்டமிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கூகுள் மத்திய நீர் ஆணையத்துடன் ஒப்பந்தம் | செஷல்ஸுக்கு பரிசளிக்கும் இந்தியா- வீடியோ

    இந்தியா செஷல்ஸ் நாட்டுடன் நட்பை தக்கவைத்துக்கொள்வதற்கு அந்நாட்டிற்கு டார்னியர் விமானம் ஒன்றை பரிசளிக்க திட்டமிட்டுள்ளது.

    இந்தியா - செஷல்ஸ் - பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளின் முத்தரப்பு கூட்டுறவை மேம்படுத்த இந்தியா செஷல்ஸ் நாட்டுக்கு டார்னியர் விமானம் ஒன்றை வழங்க உள்ளது.

    India planning to gift Dornier aircraft to Seychelles

    இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளில் சீனா தன்னுடைய செல்வாக்கை வளர்க்க ஆர்வம் காட்டிவருகிறது. இந்நிலையில், இந்தியா ராஜதந்திர நடவடிக்கையாக செஷல்ஸ்க்கு இந்த மாதம் ஜூன் 25 ஆம் தேதி டார்னியர் விமானத்தை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளது. இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா இலவசமாக வழங்கும் இரண்டாவது டார்னியர் விமானம் ஆகும்.

    செஷல்ஸ் அதிபர் டேனி ஃபார் கடந்த மார்ச் மாதம் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் போது, 2015 ஆண்டு இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ராணுவ தளம் தொடர்பான ஒப்பந்தம் கைவிடப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என கூறியிருந்தார்.

    செஷல்ஸில் இந்தியா ராணுவ தளம் அமைக்க எதிர்ப்பு நிலவுவதால் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை தொடர முடியாத நிலை உள்ளது. இதன் பின்னணியில் சீனா இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது செஷல்ஸ் உடனான நட்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜதந்திர நடவடிக்கையாக இந்தியா அந்நாட்டுக்கு டார்னியர் விமானம் ஒன்றை பரிசளிக்க முன்வந்துள்ளது.

    English summary
    India planning to gift a Dornier aircraft to Seychelles, It assumed strategy of india to develop relationship between India and Seychelles.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X