For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்

நேதாஜியின் பிறந்த நாளைத் தேசிய வல்லமை தினமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் 'பராக்கிரம திவாஸ்' என்ற அதாவது தேசிய வல்லமை தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. தேசநலனுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மாபெரும் வீரரின் பிறந்தநாளை இன்று நாட்டு மக்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்து புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Recommended Video

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.. 125வது பிறந்த தினம்..!

    நேதாஜியின் சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் இன்று நேதாஜியின் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். நேதாஜி பற்றிய நிரந்தர கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். நேதாஜியின் நினைவாக நாணயத்தையும் தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார். நேதாஜியின் கடிதங்கள் என்ற புத்தகத்தையும் வெளியிடுகிறார்.

    India Remembers Netaji On 125th Birth Anniversary

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை தேசிய வல்லமை தினமாக கொண்டாடுவதில் பெறுமைப்பட வேண்டும் என்று பலரும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். லண்டன் சென்று படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற நிலையிலும் அந்தப் பணியைத் தூக்கியெறிந்துவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர் சுபாஷ் சந்திர போஸ்.

    பார்வைக் குறைபாடு என்று ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட அந்த இளைஞர் பின்பு ஒரு ராணுவத்தையே தலைமையேற்று நடத்தினார். காந்தியின் அகிம்சைப் போராட்ட முறைக்கு மாறான ஒரு வழிமுறையை சுபாஷ் சந்திரபோஸ் தேர்வு செய்தார்.

    சுவாமி விவேகானந்தர், தாகூர், அரவிந்தர் போலவே நேதாஜியும் தமிழகத்தின் மனம்கவர்ந்தவர். சிங்கப்பூரில் அவர் இந்திய தேசிய ராணுவத்துக்குத் தலைமையேற்றபோது ராணுவத்துக்காகத் தங்களது நகைகளைக் கழற்றிக் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்ப் பெண்கள். ராணுவத்தில் ஜான்சி ராணி பெயரிலான பெண்கள் படைப் பிரிவுக்குத் தலைமையேற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி ஆவார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் சிறை இலக்கியங்களில் தவிர்க்க இயலாத இடத்தைப் பெற்றுள்ளன.

    குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டின் வலிமை மிக்க தேசிய வீரருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். நேதாஜியின் தேசபக்தி மற்றும் தியாகம் எப்போதும் எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று குடியரசுத்தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேதாஜியின் தேசபக்தியும் தியாகமும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் பதிவிட்டள்ளார்.

    நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தொடங்குகையில் நாடு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. அவரது எல்லையற்ற தைரியத்தையும் வீரத்தையும் மதிக்க இந்த நாளை பரக்ரம் திவாஸ் என்று கொண்டாடுவது பொருத்தமானது. சுதந்திரத்தின் உணர்வை வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் பதிவிட்டுள்ளார் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த்.

    பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நாட்டின் சுதந்திரத்திற்காக செய்த தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    Today marks the 125th birthday of Netaji Subhash Chandra Bose. The Union Government has announced that the birthday of freedom fighter Netaji Subhash Chandra Bose will be celebrated annually as Parakrama Divas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X