For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புயலால் பாதிப்பு.... இலங்கைக்கு உதவ நிவாரணப் பொருட்களுடன் விரைந்த இந்திய கடற்படை கப்பல்கள்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ரோவனு புயல் மற்றும் மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ நிவாரணப் பொருட்களுடன் 2 இந்திய கடற்படை கப்பல்கள் அந்நாட்டுக்கு விரைந்துள்ளன.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ரோவணு புயல் இலங்கையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளி தமிழர் வாழும் மலையகப் பகுதியில் கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 43 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 133 பேரின் கதி என்னவென தெரியவில்லை.

India rushes two naval ships with relief material to Sri Lanka

இயற்கை சீற்றத்தின் கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவ நிவாரணப் பொருட்களுடன் 2 கடற்படை கப்பல்கள் கொச்சி கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்டுள்ளன.

ஐ.என்.எஸ். சட்லெஜ் மற்றும் ஐஎன்எஸ் சுனய்னா ஆகிய இரு கப்பல்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் பிரதமர் நரேந்திர மோடி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவும் எனவும் உறுதியளித்துள்ளார்.

English summary
India has rushed two naval ships with relief materials to cyclone-hit Sri Lanka. INS Sunayna, and INS Sutlej with relief material have been rushed to Colombo from Southern Naval Command Kochi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X